சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் ‘தர்பார்’ படத்தில் நடித்து வருகிறார் . இந்த படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றது. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க இப்படத்திற்கு இசை அமைக்கிறார் அனிருத்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. மேலும், இந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்போது மும்பையில் படுமும்முரமாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் ரஜினி மும்பையில் படப்பிடிப்பிற்காக சென்றிருந்த போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி பெரும் வைரலானது.
இதையும் படியுங்க : முதல் முறையாக தனது காதலரை அறிமுகம் செய்த சிலம்பாட்டம் பட நடிகை சனா கான்.!
இந்த நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ள நயன்தாரா இன்று (ஏப்ரல் 23) மும்பையில் படப்பிடிப்பில் கலந்துகொள்ள இருக்கிறார். இந்த தகவலை இந்த படத்தை தயாரித்து வரும் லைக்கா நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தது.
இந்த நிலையில் இந்த படப்பிடிப்பில் கலந்து கொண்ட ரஜினி மற்றும் நயன்தாராவின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. அதில் ரஜினி கிரிக்கெட் விளையாடுவது போல சில புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளது. தொடர்ந்து படப்பிடிப்பு தளத்தில் இருந்து புகைப்படங்கள் வெளியாகி வருவதால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.