தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகர் விஜய். இவரது மாஸ் படங்கள் என்றாலே வசூல் ரீதியாக சாதனை படைத்து வருகிறது. இறுதியாக இவரது நடிப்பில் வெளியான சர்க்கார் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக இந்த படம் மாபெரும் சாதனைகளை படைத்தது. சர்க்கார் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய், அட்லி இயக்கத்தில் பிகில் படத்தில் நடித்திருந்தார். தெறி, மெர்சல் போன்ற படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக இணைந்து அட்லியும், விஜய்யும் கூட்டணி சேர்ந்தார்கள்.
இந்த பிகில் படம் பெண்கள் கால்பந்தாட்ட விளையாட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்டது ஆகும். இந்த படத்தில் நயன்தாரா, ஜாக்கி ஷெராப், ஆனந்தராஜ், யோகிபாபு ,விவேக், கதிர் இந்துஜா, டேனியல் பாலாஜி என்று கதிர் மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து உள்ளது. அதேபோல மெர்சல் படத்திற்கு பின்னர் இந்தப் படத்தில் நடிகர் விஜய் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் அப்பா மற்றும் மகன் கதாபாத்திரத்தில் அசத்தியுள்ளார் விஜய். அதிலும் அப்பா கதாபாத்திரத்தில் வரும் ராயப்பன் கதாபாத்திரம் தான் ரசிகர்களை மிகவும் கவர்ந்து இருக்கிறது.
இதையும் பாருங்க : விருது விழாவிற்கு கிளாமரான உடையில் வந்த அதுல்யா. வைரலாகும் புகைப்படங்கள்.
பிகில் படத்தின் பாடல்கள், ட்ரெய்லர் வெளியான உடன் ரசிகர்கள் மத்தியில் பயங்கர எதிர்பார்ப்பு வந்தது. இது அனைவருக்குமே தெரியும். பிகில் படம் வெளியாவதற்கு தாமதம் ஆனவுடன் கிருஷ்ணகிரியில் உள்ள விஜய் ரசிகர்கள் கடைகளை அடித்து உடைத்து ஆர்ப்பாட்டம் செய்தார்கள். பிகில் படத்தின் அதிகாலை சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கவில்லை அரசாங்கம். அதுமட்டும் இல்லாமல் சிறப்பு காட்சிக்கு அதிக தொகையில் கட்டணம் வசூலிப்பதை தவிர்க்க வேண்டும் என்பதற்காகவே தான் அரசாங்கம் சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கவில்லை. ஆனாலும், எப்படியோ சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு இடம் இருந்து அனுமதி வாங்கினார்கள். தமிழகம் முழுவதும் காலை 4 முதல் 5 மணிக்கு அதிகாலை பிகில் படத்தின் சிறப்பு காட்சிகள் வெளியானது.
இந்த நிலையில் கிருஷ்ணகிரியில் பிகில் திரைப்படம் சிறப்பு காட்சிகள் வெளியாக தாமதமானதால் விஜய் ரசிகர்கள் கோபம் அடைந்து கலவரத்தை ஏற்படுத்தினார்கள். இது கிருஷ்ணகிரி ரவுண்டானா அருகில் உள்ள தியேட்டர் ஒன்றில் தான் இந்த பிரச்சனை நிகழ்ந்தது. மேலும், 4 மணிக்கு தொடங்க வேண்டிய படத்தை 5 மணி ஆகியும் தொடங்கவில்லை. இதனால் விஜய் ரசிகர்கள் ஒரு சில பேர் பேனர்களை கிழித்தும், கடைகளை அடித்து நொறுக்கினர்கள். அது மட்டும் இல்லாமல் வாகன கண்ணாடிகளை உடைத்து பயங்கர போராட்டம் செய்தார்கள். இதனால் அந்த இடத்தில் அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டனர். இதே போன்று தற்போது ரஜினியின் தர்பார் படத்திற்கான சிறப்பு காட்சிக்கு தடை விதிக்கப்பட்டது காவல்துறை.
இதனால் தலைவர் ரசிகர்கள் எல்லோரும் பயங்கர கொந்தளிப்பில் உள்ளார்கள். ஜனவரி 9ஆம் தேதி எந்த அளவிற்கு கலவரம் வெடிக்க போகுது என்று தெரியவில்லை.
தர்பார் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அவர்கள் நடித்து உள்ளார். மேலும், இந்த படத்தில் ரஜினிக்கு மகளாக நிவேதா தாமஸ் நடித்து உள்ளார். இவர்களுடன் இந்த படத்தில் யோகி பாபு, ஸ்ரீமன், ஸ்ரேயா சரண், பிரதீப் பப்பர், சுனில் ஷெட்டி உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து உள்ளனர். இந்த படத்தில் ‘ஆதித்யா அருணாசலம்’ என்ற பெயரில் ரஜினிகாந்த் அவர்கள் நடித்து உள்ளார். இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து உள்ளது. சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்து உள்ளார்.