சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியான படங்களின் ஒரு நாள் கலெக்ஷன் குறித்து விவரம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 78 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நேற்று பல மொழிகளில் பிரபலமான முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகியிருந்தது. அந்த வகையில் தமிழில் நேற்று தங்கலான், டிமாண்டி காலனி 2, ரகு தத்தா போன்ற படங்கள் வெளியாகியிருந்தது. இந்த நிலையில் இந்த படங்களின் ஒரு நாள் வசூல் குறித்த விவரம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தங்கலான் படம்:
தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் விக்ரம். இவருடைய நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் தான் தங்கலான். இந்த படத்தை பிரபல இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கியிருக்கிறார். கேஜிஎஃப்பில் இருந்த பூர்வகுடி தமிழர்களின் வரலாற்றை பேசும் வகையில் இந்த படம் உருவாகி இருக்கிறது. இந்தப் படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் என பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.
முதல் நாள் வசூல் :
இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் இசை இருக்கிறார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தையும் பாராட்டையும் பெற்று வருகிறது. மேலும், முதல் நாள் மட்டும் இந்தியா முழுவதும் இந்த படம் 12 கோடிக்கு மேல் வசூல் செய்திருக்கிறது. அதில் 11 கோடி தமிழ்நாட்டில் மட்டுமே வசூல் செய்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
டிமான்டி காலனி 2 படம்:
கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான டிமான்டி காலனி முதல் பாகம் வெளியாகி இருந்தது. அதன் தொடர்ச்சியாகவே இரண்டாம் பாகமும் அமைந்துள்ளது. அருள்நிதியின் நடிப்பில் வெளியாகி இருக்கும் திகில் படம் தான் ‘டிமான்டி காலனி 2’. இப்படத்தில் அருள் நிதியுடன் இணைந்து பிரியா பவானி சங்கர், அருண் பாண்டியன், முத்துக்குமார், பிக் பாஸ் புகழ் அர்ச்சனா, மீனாட்சி கோவிந்தராஜன் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். முதல் பாகத்தில் இருக்கும் சஸ்பென்ஸ் மற்றும் விறுவிறுப்பும் இரண்டாம் பாகத்திலும் இருப்பதால் மக்கள் இப்படத்தை கொண்டாடி வருகிறார்கள். மேலும், இந்த படம் முதல் நாளிலேயே 3.5 கோடி வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது
ரகு தாத்தா படம்:
சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரபல நடிகை கீர்த்தி சுரேஷின் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் தான் ‘ரகு தாத்தா’. இப்படத்தை புது இயக்குனர் சுமன் குமார் இயக்கி இருக்கிறார். இவர் ஏற்கனவே தி ஃபேமிலி மேன் வெப் சீரிஸில் கதை ஆசிரியராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் கீர்த்தியுடன் இணைந்து தேவதர்ஷினி, ரவீந்திர விஜய், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். மேலும், இந்த படம் முதல் நாளிலேயே 25 லட்சம் வசூல் செய்திருக்கிறது. பிரபல நடிகர்களின் படங்கள் வெளியாகி இருப்பதால் கீர்த்தி சுரேஷின் ரகு தாத்தா படத்திற்கு குறைவான திரையரங்குகள் தான் கிடைத்திருக்கிறது.
இது தவிர தெலுங்கில் ரவி தேஜா நடிப்பில் மிஸ்டர் பச்சன்- முதல் நாளில் 5.3 கோடி, ராம் பொத்தினேனி நடிப்பில் டபுல் ஐஸ்மார்ட் – 7.5கோடி, மற்றும் இந்தியில் ஸ்ட்ரீ 2 – 46 கோடி வசூல் செய்து இருப்பதாக கூறப்படுகிறது.