மணிரத்னம் இயக்கத்தில் படு பிரம்மாணடமாக உருவாகி இருக்கும் படம் பொன்னியின் செல்வன். இந்த படத்தில் விக்ரம், பிரகாஷ் ராஜ், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என சினிமா உலகில் உள்ள முன்னணி நடிகர்களான பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியிடவிருக்கிறார்கள். இப்படத்தின் இரண்டு பாகங்களும் 800 கோடி பட்ஜெட் செலவில் தயாராகி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் ரவிவர்மன் ஒளிப்பதிவாளராகவும், தோட்டாதரணி கலை இயக்குனராகவும், சைடில் டெக்னிகல் ஆகவும் பணியாற்றி இருக்கிறார்கள். தற்போது படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து விட்டது.
இந்த படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இப்படி மிகப் பெரிய ஜாம்பவான்கள் மொத்தம் இந்த படத்தில் பணியாற்றி இருப்பதால் படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. மேலும், படத்தில் சுந்தரசோழன் – சரத்குமார், ஆதித்த கரிகாலன்- விக்ரம், வந்தியதேவன் – கார்த்திக், நந்தினி- ஐஸ்வர்யா ராய், குந்தவை- திரிஷா, அருள்மொழி வர்மன் – ஜெயம் ரவி நடித்து இருக்கிறார்கள்.அனைவரும் எதிர்பார்த்திருந்த பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி இருந்தது.
இதையும் பாருங்க : 26 ஆண்டுகளை நிறைவு செய்த காதல் கோட்டை – முதலில் நடித்த நடிகர், முதலில் வைக்கப்பட்ட Climax பற்றி தெரியுமா ?
பாகுபலியுடன் ஒப்பிட்டு கலாய்த்த தெலுங்கு ரசிகர்கள் :
படு பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் இந்த படம் அனைத்து மொழிகளிலும் வெற்றி பெற்று Pan இந்திய அளவில் வெற்றி பெரும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தெலுகு ரசிகர்கள் பலரும் இந்த படத்தை பாகுபலியுடன் ஒப்பிட்டு கேலி செய்து வருகின்றனர். இதற்கு தமிழ் ரசிகர்கள் பலரும் பதிலடி கொடுத்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் பாகுபலி திரைப்படமே பொன்னியின் செல்வன் நாவலின் இன்ஸ்பிரேஷன் தான் என்று தமிழ் ரசிகர்கள் பலர் தெலுங்கு ரசிகர்களுக்கு ஆதாரத்துடன் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
பாகுபலிக்கு முன் ராஜமௌலி போட்ட ட்வீட் :
கடந்த 2011 ஆம் ஆண்டு ராஜமவுலி தன்னுடைய அடுத்த படத்தை பிரபாஸை வைத்து இயக்குவதாக கூறியிருந்தார். இதை தொடர்ந்து 2013 ஆம் ஆண்டு தான் பாகுபலி படத்தின் அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருந்தனர். இப்படி ஒரு நிலையில் பாகுபலி திரைப்படம் வெளியாகும் முன்னரே பொன்னியன் செல்வன் நாவல் குறித்து ராஜமௌலி பதிவிட்டிருக்கும் பதிவு ஒன்று தற்போது வரலாக வருகிறது.
பொன்னியின் செல்வன் Vs பாகுபலி :
கடந்த 2011 ஆம் ஆண்டு ஜூன் 30-ம் தேதி ட்விட்டரில் ரசிகர் ஒருவர் ராஜமௌலி இடம் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் மற்றும் சிவகாமியின் சபதம் நாவல்களை நேரமிருந்தால் படித்து பாருங்கள் என்று கூறியிருந்தார். இதற்கு பதில் அளித்த ராஜமௌலி பொன்னியின் செல்வன் நாவலை படித்தேன் மிகவும் அற்புதமான கதை மற்றும் கதாபாத்திரங்கள் என்று பதிவிட்டு இருக்கிறார். அப்படி எனில் பாகுபலி படத்தை எடுக்கும் முன்னரே ராஜமவுலி பொன்னியின் செல்வன் நாவலை படித்திருக்கிறார்.
தமிழ் ரசிகர்கள் பதிலடி :
அதனால் தான் பாகுபலி படத்தில் பொன்னியின் செல்வன் நாவலில் இருந்து பல விஷயங்களை எடுத்து காட்சிப்படுத்தியிருக்கிறார். ஆனால், ரசிகர்கள் பலரும் பாகுபலி திரைப்படம் மகாபாரதம் கதையின் இன்ஸ்பிரேஷன் என்று கூறி வருகிறார்கள். இப்படி ஒரு நிலையில் பாகுபலி திரைப்படத்தில் பொன்னியின் செல்வன் நாவலில் இடம்பெற்ற காட்சிகளை போலவே ஒத்துப் போகும் பல்வேறு காட்சிகள் இடம் பெற்று இருப்பதாக கூறி புகைப்படங்களை சமூக வளைத்தளத்தில் தமிழ் ரசிகர்கள் பதிவிட்டு வருகிறார்கள்.