விஜய் தொலைக்காட்சியில் உள்ள தொகுப்பாளர்களில் ரசிகர்களின் ஆள் டைம் பேவரைட் தொகுப்பாளியனாக திகழ்ந்து வருகிறார் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவரை பெரும்பாலும் டிடி என்று தான் செல்லமாக அனைவரும் அழைப்பார்கள். இவர் 20 வருடங்களுக்கு மேலாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் ஜாம்பவனாக திகழ்ந்து வருகிறார். இத்தனை ஆண்டுகளாக சினிமா துறையில் இருந்தாலும் இளமை ததும்பும் முகம் பாவம் உடையவர் திவ்யதர்ஷினி. நடிகை டிடி அவர்கள் வெள்ளித்திரை, சின்னத்திரை என எல்லாத் துறைகளிலும் ஒரு கலக்கு கலக்ககி இருக்கிறார்
திவ்யதர்ஷினி அவர்கள் முதலில் திரைப் படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து உள்ளார். தற்போது இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டு இருக்கும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும், நடுவராகவும் இருந்து வருகிறார். டிடி கடந்த 2014 ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். மேலும், இவர்களது திருமணம் காதல் திருமணம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
டிடி திருமணத்திற்குப் பிறகும் படங்களிலும் எந்த ஒரு டிவி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளக் கூடாது என டிடி கணவர் வீட்டில் உள்ள அனைவரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் திவ்யதர்ஷினிக்கு அவருடைய கணவர் ஸ்ரீகாந்துக்கும் பிரச்சனைகள் ஏற்பட்டதை தொடர்ந்து, அவர்கள் சில காலமாக தனியாக தான் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். பிறகுதான் இருவரும் பரஸ்பரமாக விவாகரத்து செய்யலாம் என விரும்பி சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் மனு அளித்தார்கள் பின்னர் உறுதியாக விவாகரத்தும் வாங்கினார்கள்.
இவர்களின் விவாகரத்துக்கு பலரும் பல்வேறு விதமான காரணங்களை கூறி வந்தனர். ஆனால், அதையெல்லாம் தாண்டி தன்னுடய துறையில் ஒரு வெற்றிகரமான பெண் மணியாக திகழ்ந்து வருகிறார் டிடி. அதே போல 36 வயதை கடந்த டிடி இன்னமும் சிங்கிளாக தனது வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் நேற்று காதலர் தினத்தில் டிடி, காதல் குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
அதில் ‘காதலில் நல்லா போய்க்கிட்டு இருக்கும். திடீர்னு ஒரு நாள் அது எல்லாம் தவறு என்று ஆகி நம்ம கிட்ட பேச மாட்டாங்க, நமக்கு மெசேஜ் பண்ண மாட்டாங்க, கால் பண்ண மாட்டாங்க, ஒரு நாள் அப்படியே நம்மள ஹோல்ட் பண்ணி விடுவாங்க. நாம எப்பவுமே என்ன நினைப்போம்னா நாம என்ன தப்பு செஞ்சோம்? என்ன நடந்தது? அந்த நாள் வரைக்கும் கரெக்டா தான போய்கிட்டு இருந்தது.’
என்ன தப்பு நம்ம மேல இருக்கிறது என்பதை பார்ப்பதற்காக நாம ட்ரை பண்ணுவோம்.ஆனா இது சரியான தீர்வு அல்ல, அவங்க உங்கள லவ் பண்ண முடியாத காரணத்தினால் தான் அவங்க நம்ம கிட்ட இருந்து விலகிப் போய் இருப்பாங்க. தவிர உண்மையிலேயே நம்ம மேல தப்பு இருக்காது. அப்படி ஏதாவது தப்பு இருந்திருந்தால் அவங்க நம்ம கிட்ட சொல்லி இருப்பாங்க.காதல் என்பது நிஜமா நடக்கணும் என்று இருந்தால் அது இயல்பா இனிமையா நடக்கனும். நாம் நம்மளை மீண்டும் மீண்டும் அவங்க கிட்ட நிரூபிக்க வேண்டாம் என்று கூறியுள்ளார்.