சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பேட்ட திரைப்படம் அடுத்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளது. இந்நிலையில் ரஜினி மீது தொடர்பாட்டிருந்த அவதூறு வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
நடிகர் தனுஷின் தந்தையும், பிரபல தயாரிப்பாளர், இயக்குநருமான கஸ்தூரி ராஜா மீது சினிமா பைனான்சியர் முகுந்த் சந்த் போத்ரா, 65 லட்சம் ரூபாய் செக் மோசடி வழக்கு தொடர்ந்திருந்தார்.
தான் பணம் தரவில்லை என்றால் தமது உறவினர் நடிகர் ரஜினிகாந்த் பணத்தை திருப்பித் தருவார் என்று கஸ்தூரிராஜா தெரிவித்திருந்தார் என்று நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இதையும் படியுங்க : ரஜினி பற்றி ஒரே வார்த்தையில் திட்டிய சீமான்..! உச்சகட்ட கோபத்தில் ரஜினி ரசிகர்கள்
பணம் பறிப்பதற்காக தம் மீது போத்ரா வழக்கு தொடர்ந்ததாக ரஜினிகாந்த் கூறியதால் அவர் மீது, சென்னை ஜார்ஜ் டவுண் நீதிமன்றத்தில் போத்ரா அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை ரத்து செய்ய கோரி, நடிகர் ரஜினிகாந்த் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள உரிமையியல் வழக்கை நிராகரிக்கக் கோரிய மனுவில் தெரிவித்த கருத்தின் அடிப்படையில், அவதூறு வழக்கு தொடர முடியாது என ரஜினிகாந்த் தரப்பில் வாதாடப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்தனர்.