அருள்நிதிய விடுங்க, விமர்சிப்பவர்கள் வாயை அடைத்தாரா PBS – ‘டிமாண்டி காலனி 2’ விமர்சனம் இதோ

0
386
- Advertisement -

பல எதிர்பார்ப்புகளுக்கு இடையே அருள்நிதியின் நடிப்பில் வெளியாகி இருக்கும் திகில் படம் தான் ‘டிமான்டி காலனி 2’. இப்படம் 2015 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற டிமான்டி காலனி படத்தின் இரண்டாவது பாகம் ஆகும். இப்படத்தில் அருள் நிதியுடன் இணைந்து பிரியா பவானி சங்கர், அருண் பாண்டியன், முத்துக்குமார், பிக் பாஸ் புகழ் அர்ச்சனா, மீனாட்சி கோவிந்தராஜன் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கிய இந்த திரில்லர் படம் வெற்றி பெற்றதா? இல்லையாஃ? என்பதை பார்ப்போம்.

-விளம்பரம்-

கதைக்களம்:

முதல் பாகத்தில் டிமான்டி காலனி என்கிற இடத்தில் அமைந்துள்ள ஒரு அரண்மனையில் இருக்கும் செயினை எடுக்க நினைக்கும் சிலருக்கு ஏற்பட்ட அகால மரணம் குறித்தும், சைனை எடுப்பவர்கள் உயிரை பறிக்கும் ஜான் டிமான்டி குறித்தும் கூறியிருப்பார்கள். தற்போது இந்த முதல் பாகத்தின் தொடர்ச்சியாகவே இரண்டாம் பாகமும் அமைந்துள்ளது. கதாநாயகன் ஸ்ரீனிவாசன் (அருள்நிதி) இறப்பது போல் முதல் பாகத்தில் காட்டியிருப்பார்கள்.

- Advertisement -

ஆனால் ஸ்ரீனிவாசன் இறக்காமல் இருப்பதே இந்த இரண்டாம் பாகத்தின் ஓப்பனிங். இறந்து விட்டதாக காட்டிய கதாநாயகனை காப்பாற்றியது யார்? எதற்காக அவரைக் காப்பாற்றினார்கள்? முதல் பாகத்தில் இருந்த செயினிற்கும் டிமான்டிக்கும் கடைசியில் என்ன ஆனது என்பதே மீதிக்கதை. முதல் பாகத்தில் நமக்கு சஸ்பென்ஸ் வைத்தது போல், இரண்டாம் பாகத்திலும் வைத்திருக்கிறார்கள். அதற்கான விடைகள் மூன்றாம் பாகத்தில் கிடைக்கும் என்பது போல் இப்படத்தின் கிளைமாக்ஸ் அமைந்துள்ளது.

மேலும், இந்த படத்தில் ஹீரோ அருள்நிதி, கதைக்கு தேவையான அளவு நடித்துள்ளார். முத்துக்குமார், அருண் பாண்டியன், செரிங் டோர்ஜி ஆகியோர் தங்களது நடிப்பால் படத்திற்கு பலம் சேர்த்து உள்ளனர். ஒரு சில காட்சிகளில் வந்தாலும், ப்ரியா பவானி சங்கர் நடிப்பில் அசத்தியுள்ளார். குறிப்பாக ஒளிப்பதிவாளர் ஹரிஷ் கண்ணன் மற்றும் இசையமைப்பாளர் சாம் சி.எஸ் தங்களுக்கு கொடுத்த பணியை சிறப்பாக செய்து இருக்கிறார்கள். நீண்ட நாட்களுக்குப் பிறகு, இப்படம் கண்டிப்பாக எல்லா வயது ரசிகர்களையும் ஈர்க்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

-விளம்பரம்-

மேலும், இயக்குனர் அஜய் ஞானமுத்து தான் சொல்ல வந்த கதையை ரசிகர்களுக்கு தெளிவாக கூறியுள்ளார். அதாவது 15 ஆம் நூற்றாண்டில் நடந்த ஏதோ ஒரு பிரச்சனை தான் இப்போது நடக்கும் அனைத்து சம்பவங்களுக்கும் காரணமாகவும், அதை மிகவும் சஸ்பென்ஸ் ஆக வைத்து அனைத்தும் காட்சிகளிலும் முதல் பாகத்தைப் போலவே நம்மை படம் பார்க்கும்போது சீட்டின் முனையில் இயக்குனர் உட்கார வைக்கிறார்.

நிறை:

கதை, திரைக்கதை அருமை

ஒளிப்பதிவு மற்றும் இசை படத்திற்கு கூடுதல் பலத்தை சேர்க்கிறது

சஸ்பென்ஸ் திரில்லர் பாணியில் அமைந்துள்ளது

குறை:

ஹாரர் திரில்லர் படம் என்பதால் கிராபிக்ஸில் கவனம் செலுத்தி இருக்கலாம்

மற்றபடி படத்தில் பெரிதாக எந்த குறையும் இல்லை

மொத்தத்தில் டி மான்ட்டி காலனி திகில் விரும்பிகளுக்கு நல்ல விருந்து

Advertisement