விவாகரத்துக்கு பிறகு இரண்டாம் திருமணம் செய்த சீரியல் நடிகை – புகைப்படம் உள்ளே

0
13500

இந்தகால செலிபிரிட்டிகள் வாழ்க்கையில் திருமணம் என்பது பெரும்பாலும் கசப்பான ஒன்றாக முடிகிறது. இதற்கு காரணமாக கூறப்படுவது திருமணத்திற்கு பிறகு குறிப்பிட்ட நடிகைகள் நடிக்கக்கூடாது என்று கூறுவதும், பல கருத்து வேறுபாடுகளும் ஆகும். சமீபத்தில் கூட சின்னத்திரை தொகுப்பாளினி டிடி கருத்து வேறுபாடு காரணமாக தன் கணவரிடம் இருந்து விவாகரத்து வேண்டும் என கேட்டு கோர்ட் வாசலை மிதித்துள்ளார்.

deepika-kakkar

தமிழ் திரையுலகில் உள்ள செலிபிரிட்டிகள் இப்படி என்றால், இன்னும் அட்வான்சாக ஒருக்கும் பாலிவுட் திரையுலகம் எப்படி இருக்கும் என யோசிக்கவே வேண்டாம்.

பாலிவுட்டில் சின்னத்திரை நாயகியாக வலம் வருபவர் தீபிகா காகர். இவருக்கு தற்போது 30 வயதாகிறது. இவருக்கும் ரவுனக் மேத்தா என்பவருக்கும் கடந்த 2013ஆம் ஆண்டு திருமணம் ஆனது. ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2015ஆம் ஆண்டு இவரிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டார் தீபிகா.

deepika kakkar

மேலும் கடந்த வருடங்களாக தனது முன்னாள் காதலன் சோயப் இப்ராஹிம் உடன் லிவிங் டுகெதர் வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். தற்போது இப்ராஹிமுடன் இந்த காதலர் தினத்தை வெகு சிறப்பாக ஒவ்வொரு நாளும் கொண்டாடி உள்ளார் தீபிகா.

மேலும், லிவிங் டுகெதரில் இருக்கும் இருவரும் கூடிய சீக்கிரத்தில் திருமணம் செய்து கொள்ள உள்ளனர். லிவிங் டுகெதரில் இருவரும் கணவன் மனைவி போல பாசமாக வாழ்ந்து வருகின்றனர். இதனை காட்டும் வகையில் தன் காதலனுடன் தனது ட்விட்டர் தினமும் ஒரு புகைப்படத்தை பதிவு செய்த்துள்ளார் தீபிகா.