-விளம்பரம்-
Home பொழுதுபோக்கு சமீபத்திய

என்னை தேச துரோகியா நினைக்கிறார் – 23 வருடமாக ஒதுக்கி வைத்து இருக்கும் நகுல். கலங்கிய தேவையானி கணவர் ராஜகுமாரன்.

0
164

0ஸ் காலகட்டத்தில் சினிமா உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தவர் நடிகை தேவயானி. இவர் மும்பையை சேர்ந்தவர். இவருடைய இயற்பெயர் சுஷ்மா . 1993 ஆம் ஆண்டு சினிமாவில் அறிமுகமான இவர் தற்போது வரை சினிமாவில் வருகிறார். தமிழ் சினிமாவில் உள்ள விஜய், அஜித், , சூர்யா, விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து புகழ்பெற்றவர் நடிகை தேவயானி. பின் இவர் தமிழ், தெலுங்கு, பெங்காலி, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து உள்ளார். மேலும், நடிகை தேவயானி அவர்கள் சினிமா உலகில் இந்த அளவிற்கு பிரபலமாக இருப்பதற்கு காரணம் இயக்குனர் ராஜகுமாரன் தான். தேவயானியும், இயக்குநர் ராஜகுமாரனும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள்.

-விளம்பரம்-

இவர்களுக்கு இனியா, பிரியங்கா என்ற இரண்டு மகள்கள் உள்ளார்கள். தற்போதும் தேவையானி பல படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும், படங்களை தவிர பல சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வருகிறார். அதிலும் இவர் நடித்த கோலங்கள் சீரியல் ஆறு வருடங்கள் வெற்றிகரமாக ஓடியது. தற்போது இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி கொண்டு இருக்கும் தொடரில் நடித்தும், நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்றும் வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க, நடிகை தேவயானி அவர்கள் இயக்குநர் ராஜகுமாரனை காதலித்து திருமணம் செய்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

தேவயானி- ராஜகுமாரன் திருமணம் :

ஆனால், தேவயானி காதலுக்கு அவரது தாய் சம்மதம் தெரிவிக்கவில்லை. இதனால் தேவயானி வீட்டில் கடும் எதிர்ப்பு எழுந்தது. பின் நண்பர்கள் முன்னிலையில் ஓடிப்போய் தேவயானி- ராஜகுமாரன் திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுடைய திருமணம் 2001 ஆம் ஆண்டு திருத்தணியில் நடந்தது. மேலும், இவர்கள் திருமணம் செய்து கொண்டதை அறிந்த இரு வீட்டார் பெற்றோர்களும் பயங்கர கோபத்தில் இருந்தார்கள். இவர்கள் இருவரிடமும் இரு குடும்பத்தாரும் பேசாமல் இருந்தார்கள். அதிலும் தேவயானியின் குடும்பம் இயக்குனர் ராஜகுமாரன் குடும்பத்தின் மீது போலீஸ் புகார் எல்லாம் அளித்திருந்தார்கள்.

ராஜகுமாரன் மீது கோபத்தில் இருக்க காரணம்:

-விளம்பரம்-

இது குறித்து அப்போது பயங்கர பேசப்பட்டது. அதுமட்டுமில்லாமல் தேவயானியின் தம்பி நகுல் இன்று வரை இயக்குனர் ராஜகுமாரன் உடன் பேசுவதில்லையாம். தேவையானிக்கு நகுல், மயூர் என்ற இரண்டு சகோதரர்கள் உள்ளார்கள். தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர் நகுல் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. தொடக்கத்தில் நகுல் நடித்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தாலும் இப்போது வெற்றிக் கொடுக்க போராடிக் கொண்டிருக்கிறார். இறுதியாக செய் என்ற படத்தில் நடித்திருந்தார் நகுல். ஆனால், அந்த படத்தில் எதிர்பார்த்தபடி வரவேற்பை பெறவில்லை. தற்போது நடிகர் நகுல் சில படத்தில் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

நகுல் பற்றிய தகவல்:

90 காலகட்டத்தில் நடிகை தேவையானி முன்னனி நடிகையாக திகழ்ந்து வந்தாலும், தேவையானியின் சகோதரருக்கு சினிமாவில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு புகழ் கிடைக்கவில்லை என்பது தான் உண்மை. அதேபோல் தேவையானியின் இன்னொரு சகோதரர் மயூர். இவர் வெளிநாட்டில் வேலை செய்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் நடிகர் நகுல் குறித்து இயக்குனரும், தேவயானியின் கணவருமான ராஜகுமாரன் அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர் கூறியிருப்பது, என்னுடைய மைத்துனர் நகுல் என்னுடன் இன்னும் பேசுவது இல்லை. நான் செய்தது தேசத் துரோகமாக அவர் இன்னமும் நினைத்துக் கொண்டிருக்கிறார்.

நகுல் குறித்து ராஜகுமாரன் அளித்த பேட்டி:

என்னை தேச துரோகக் குற்றத்தில் சம்பந்தப்பட்டவன் ஆகவே பார்க்கிறார். மாமியார் எல்லோரும் ஏற்றுக் கொண்டாலும் அவர் மட்டும் இன்னும் ஏற்றுக் கொள்ளவில்லை. அது மட்டுமில்லாமல் அவரவர் வாழ்க்கையில் தனியாக சென்று விட்டார்கள். தேவயானி வீட்டில் யாரும் எங்களுடன் தொடர்பில்லை. தேவயானி இன்னொரு தம்பி பூனேவில் வேலை செய்துகொண்டிருக்கிறார். அவர் மட்டும் போனில் எப்போவது பேசுவார். ஆனால், நகுல் அவ்வளவாக தேவயானியுடன் பேசுவது கிடையாது. எங்களுக்கு தமிழ்நாட்டு மக்களும், கலை உலகம் தான் உறவுகள் என்று கூறியிருந்தார். இப்படி இவர் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-

Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news