விஜய்யின் மெர்சல் படத்தை நேரடியாக பொதுமேடையில் தாக்கி பேசினார் நடிகை தன்ஷிகா

0
2639
Dhansika

கபாலியில் வித்யாசமான கெட்டப்பில் சூப்பர் ஸ்டர ரஜினி காந்தின் மகளாக நடித்து பாராட்டியனை பெற்றவர் நடிகை தன்ஷிகா. பின்னர், பல படங்களில் நடிக்க வாய்ப்புகள் அவரைத் தேடி வந்தது. தற்போது தென்னிதிந்திய சினிமாவின் அனைத்து மொழிகளிலும் நடித்து வருகிறார் தன்ஷிகா.
 Dhansika சமீபத்தில் ஒரு படத்தின் ப்ரோமொசன் விழாவில் தனக்கு தன்ஷிகா மரியாதை கொடுக்கவில்லை என அவரை மேடையிலேயே தனேக்கே உரிய பானியில் அடுக்கு மொழியில் திட்டி தீர்த்தார் பல்துறை திரைக்கலைஞர் டி.ராஜேந்திரன். இந்த விஷயம் அப்போது சர்ச்சையாக வெடித்து, ஒரு வழியாக செட்டில் ஆகியது.

தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார் நடிகை தன்ஷிகா. அவர் தற்போது நடித்துள்ள படம், ‘விழித்திரு’. இந்த திரைப்படம் தீபாவளிக்கு முன்னரே வெளியாவதாக இருந்தது, அந்த சமயத்தில் தயாரிப்பாளர் சங்கம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டது.

இதையும் படிங்க: விஜய்யுடன் எடுத்த புகைப்படம் லீக் ஆனதால் ட்விட்டரில் கோபத்தை வெளிக்காட்டிய நடிகை?

இதன் காரணமாக தயாரிப்பாளர் சங்கத்தில் விழித்திரு படத்திற்கன டாக்குமென்ட் வேலைகள் நடைபெறவில்லை. இதனால் படம் அப்போது ரிலீஸ் ஆகவில்லை எனக் கூறினார் தன்ஷிகா.
mersalபின்னர் தீபாவளிக்கு வெளியாக ஏற்பாடுகள் செய்யப்பட்டாலும் தயாரிப்பாளர் சங்கத்தில் மெர்சல் படத்திற்கான வேலைகள் மட்டுமே நடைபெற்றது.காசு இருந்தால் என்ன வேண்டுமானால் செய்யலாம், இல்லாததால் தீபாவளிக்கு விழித்திரு படம் வெளியாகவில்லை எனக் கூறினார்.

அதே போல் மற்ற மொழிகளில் எல்லாம் படத்தின் கதை நன்றாக இருந்தால் ஓடும், ஆனால் தமிழில் அப்படி இல்லை எனவும் கூறினார் தன்ஷிகா.
 Dhansika தன்ஷிகாவின் மெர்சல் படத்தைப் பற்றிய இந்த கருத்து ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், விமர்சனத்தையும் ஏற்ப்படுத்தி வருகிறது.