தனுஷ் தவறவிட்ட ‘திருடன் போலீஸ்’ பட இயக்குனருடன் தனுஷ். வைரலாகும் அரிய புகைப்படம்.

0
5054
thirudanpolice
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் நடிகர் தனுஷ். இவர் நடிகர் மட்டுமில்லாமல் தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர், திரைக்கதையாசிரியர், திரைப்பட தயாரிப்பாளர், என பல முகங்களை கொண்டவர். கடந்த ஆண்டு இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த “அசுரன்” படம் அசுர வசூல் வேட்டையை செய்தது. சமீபத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் செந்தில் குமார் இயக்கத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளிவந்த “பட்டாஸ்” படம் வேற லெவல் மாஸ் காட்டியது.

-விளம்பரம்-

இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் தனுஷ் நடித்து கைவிடப்பட்ட படத்தின் போஸ்டர் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. இதனை ரசிகர்கள் அனைவரும் ட்ரெண்டிங் செய்து வருகிறார்கள். கடந்த 2006 ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ், சோனியா அகர்வால், புன்னகை இளவரசி சினேகா உள்ளிட்ட பலர் நடித்து சூப்பர் டூப்பர் ஹிட் ஆன படம் புதுப்பேட்டை.

இதையும் பாருங்க : மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதியின் மாஸ் பாடல். லிரிகள் வீடியோ இதோ.

- Advertisement -

இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. தற்போது கூட இந்த படத்தின் இரண்டாம் பாகம் எப்போ வரும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த படத்தில் யுவன் சங்கர் ராஜா இசை அமைப்பாளராக இருந்தார். அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு ஆக இருந்தார். இந்த படத்திற்கு பிறகு ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணா அவர்கள் முதன் முதலாக இயக்குநராக அவதாரம் எடுத்தார்.

அவர் தனுஷை வைத்து ஒரு கதையும் எழுதி இருந்தார். அந்த படத்திற்கு “திருடன் போலீஸ்” என்றும் பெயர் வைத்தார். இந்த படத்தை தனுஷின் சகோதரி விமலா கீதா தயாரித்து வந்தார். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைப்பதாக இருந்தார். ஆனால், சில காரணங்களால் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நின்று விட்டது.

இதையும் பாருங்க : வாத்தி கம்மிங் பாடலுக்கு தந்தையுடன் சேர்ந்து ஆட்டம் போட்ட பாண்டியம்மாள்.

-விளம்பரம்-

பின்பு காலப்போக்கில் படமும் கைவிடப்பட்டது. சமீபத்தில் இந்த திரைப்படத்தின் போஸ்டர் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரில் நடிகர் தனுஷ் அவர்கள் கண்ணாடி அணிந்து திருடன் போல் போஸ் கொடுத்திருக்கிறார். இந்த நிலையில் இந்த படத்தின் இயக்குனருடன் தனுஷுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Advertisement