வாத்தி கம்மிங் பாடலுக்கு தந்தையுடன் சேர்ந்து ஆட்டம் போட்ட பாண்டியம்மாள்.

0
68282
robos
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் முடி சூடா மன்னாக வலம் வருபவர் தளபதி விஜய். கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த படம் பிகில். இந்த படம் உலக அளவில் மாபெரும் வெற்றி அடைந்தது. இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்து இருந்தார். இந்த படம் முழுக்க முழுக்க பெண்களின் கால்பந்தாட்ட விளையாட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்டது. இந்தப் படத்தில் பெண்கள் கால்பந்தாட்ட அணியில் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா நடித்து உள்ளார்.

-விளம்பரம்-

தொலைக்காட்சியில் மேடை கலைஞராக இருந்து தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வரும் நடிகர் ரோபோ ஷங்கரின் மகள் தான் இந்திரஜா என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் இந்திரஜா அவர்கள் பாண்டியம்மாள் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். பிகில் படத்தில் விஜய் அவரை குண்டம்மா.. குண்டம்மா.. என அழைத்து வெறியேற்றும் சீன் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இதையும் பாருங்க : பா ஜ க தொழிலதிபரின் மகனை மணக்கிறார் கீர்த்தி சுரேஷ். பிரபல நடிகர் கொடுத்த ஷாக்.

- Advertisement -

அந்த ஒரு சீனிலேயே இவர் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் மனதையும் கொள்ளை அடித்து விட்டார். முதல் படத்திலேயே தன்னுடைய நடிப்பால் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தார். இவர் படப்பிடிப்பு தளத்தில் துருதுருவென சுற்றிக் கொண்டே இருப்பாராம். இந்திரஜாவின் டிக் டாக் வீடியோக்கள் எல்லாம் சோசியல் மீடியாவில் வைரலாகி வரும். சோசியல் மீடியாவில் அந்த வீடியோக்கள் எல்லாம் ட்ரெண்டிங்கில் இருக்குமாம்.

பிகில் படத்திற்கு முன்பாகவே சோசியல் மீடியாவில் இந்திரஜா படு ஃபேமஸ். அதன் மூலமாக தான் இவருக்கு படத்தில் வாய்ப்பு கிடைத்தது என்று சொல்லலாம். அதேபோல அப்பா, அம்மா, தங்கையுடன் சேர்ந்து விதவிதமான டிக் டாக் வீடியோக்களை செய்து உள்ளார். சமீபத்தில் கூட இவர் மாடர்ன் உடையில் நடத்திய போட்டோ ஷூட் வீடியோக்கள் எல்லாம் சோசியல் மீடியாவில் வைரலாகி இருந்தது.

-விளம்பரம்-

இந்த நிலையில் தற்போது நடிகை இந்திரஜா அவர்கள் மாஸ்டர் படத்தில் வெளியாகவிருக்கும் வாதி கம்மி பாடலுக்கு ஒரு செம குத்தாட்டம் போட்டுள்ளார். இந்த பாட்டுக்கு தன் அப்பா ரோபோ சங்கர் உடன் சேர்ந்து இவர் குத்தாட்டம் போட்டுள்ளார். இந்த வீடியோவை தளபதி விஜய் பார்த்தால் கூட அசந்து விடுவார். அந்த அளவிற்கு அப்பா, பொண்ணு இருவரும் சேர்ந்து சூப்பராக நடனம் ஆடி உள்ளார். இந்த வீடியோவை நடிகர் ரோபோ சங்கர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த டிக் டாக் வீடியோ சில மணி நேரங்களில் ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை கடந்து விட்டது. கொரோனா வைரஸின் காரணமாக பிரபலங்கள் வீட்டில் இருப்பது போரடிக்காமல் இருப்பதற்காக இது போன்று டிக் டாக் வீடியோக்கள் செய்து பிரபலங்கள் தங்களுடைய பொழுதை கழித்துக் கொண்டு வருகின்றனர். மேலும், கொரோனா காரணமாக இந்திரஜா, அவரது அப்பா இருவரும் மாஸ்க் அணிந்து கொண்டு வாத்தி கமிங் பாடலுக்கு போட்டிருக்கும் ஆட்டம் வீடியோவில் பட்டையை கிளப்பிக் கொண்டு வருகிறது.

Advertisement