யூடூயூபில் கொட்டும் பணம் – Bmw காரை வாங்கிய 2 மாதத்தில் மற்றொரு புதிய கார். இந்த காரோட விலை எவ்ளோ தெரியுமா ?

0
981
manimegalai
- Advertisement -

சமீப காலமாகவே விஜய் டிவி பிரபலங்கள் பலரும் கார்களை வாங்கி வந்த வண்ணம் இருக்கின்றனர். குக்கு வித் கோமாளி புகழ், சரத் ஆகியோர் புதியகாரை வாங்கி இருந்தனர். அதே போல கலக்க போவது யாரு ஈரோடு மகேஷ், டிவி ஜாக்லின் என்று பலர் சமீபத்தில் புதிய காரை வாங்கி இருந்தனர். அதே போல சமீபத்தில் ஷிவானி Bmw காரை வாங்கி இருந்தார். அவரை தெடர்ந்து தாடி பாலாஜியும் Bmw காரை வாங்கி இருந்தார்.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் ஷிவானி மற்றும் தாடி பாலாஜியை தொடர்ந்து மணிமேகலையும் Bmw காரையும் வாங்கி இருந்தார். மணிமேகலை உசேன் என்ற நடன கலைஞரை காதலித்து வந்தார்.மணிமேகலை பெற்றோர் மற்றும் சகோதரர்கள் இவர்களுடைய காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். பின் இவர்கள் வீட்டை விட்டு வெளியே வந்து திருமணம் செய்து கொண்டார்கள்.

இதையும் பாருங்க : எப்படி தான் இவர் மட்டும் இப்படி கதைய தேர்ந்தெடுக்கிறாரோ – ‘வனம்’ விமர்சனம் இதோ.

- Advertisement -

மணிமேகலை திருமணத்திற்குப் பின்னும் தொடர்ந்து நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்து வருகிறார். அதே போலஇந்த தம்பதி யூடுயூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகின்றனர். இந்த யூடுயூப் சேனலை 1.39 மில்லியன் பேர் பின்தொடர்ந்து வருகிறார்கள். இவர்கள் போடும் பல வீடியோக்கள் பல லட்சம் பார்வையாளர்களை குவித்து வருகிறது.

MANIMEGALAI on Twitter: "Hussain Manimegalai 's Very Own BRAND NEW BMW X1  🕺😎 சொந்த முயற்சியில் adutha Achievement 😎 Fav & Dream CAR 🚙 Arrived  on Auspicious Vinayagar chathurthi Day 💛 Sri Rama

இவர்கள் யூடுயூப் மாத வருமானம் மட்டும் 6 லட்சம் என்று கூறப்படுகிறது. இப்படி ஒரு நிலையில் கடந்த விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு புதிய Bmw காரை வாங்கி இருந்தார். அதற்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் தற்போது மற்றொரு புதிய காரை வாங்கி இருக்கின்றனர். Hyundai Venue என்ற அந்த காரின் விலை 7 முதல் 11 லட்சம் வரை இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement