டீ குடிக்கிற நேரத்துல சிந்திச்சா கூட ஒரு கத வரும் – ஜகமே தந்திரம் படத்தை வச்சி செய்த ப்ளூ சட்டை மாறன்.

0
1701
jagam
- Advertisement -

சினிமா உலகில் வெளிவரும் திரைப்படங்களை கிண்டலாகவும் ,கேலியாகவும் விமர்சனம் செய்து வருபவர்தான் ‘ப்ளூ சட்டை மாறன்’ இவர் பிரபலமான ஹீரோக்களான ரஜினி, கமல், விஜய், அஜித் உள்பட யாருடைய படமானாலும் பாரபட்சம் பார்க்காமல் கிண்டல் செய்து வருவார். இவருடைய வீடியோக்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டமும் இருந்து வருகிறது. இவருக்கு இதுவரை 9 லட்சத்திற்கும் மேலான சப்ஸ்கிரைபர் உள்ளார்கள். இவருடைய விமர்சனங்களால் படத்தின் வசூல் பாதிக்கப்படுகிறது என சினிமா பட இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் புலம்பி கொட்டுகின்றனர்.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் தனுஷின் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி இருக்கும் ஜகமே தந்திரம் படத்தை வச்சி செய்துள்ளார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஜேம்ஸ் காஸ்மோ, ஜோஜு, கலையரசன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஜகமே தந்திரம்’ நேற்று (ஜூன் 18) Netflix Ott தளத்தில் வெளியாகி இருந்தது.

இதையும் பாருங்க : அக்ஷய் குமார் பதிவிட்ட மீம் – சண்டைக்கு அழைத்த அண்டர்டேக்கர். அக்ஷய் குமார் சொன்ன பதில்.

- Advertisement -

லண்டனில் புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் அகதிகளை அந்த நாட்டில் இருந்து விரட்ட கேங்ஸ்டர் கும்பல் ஒன்று செயல்பட்டு வருகிறது. அவர்களுக்கு எதிராகவும் ஈழத்தமிழகர்கள் மற்றும் புலம்பெயர் மக்களுக்கு ஆதரவாக ஒரு தமிழர் போராடுகிறார். அவரை மதுரை தமிழரான தனுஷை வைத்து கொள்கின்றனர். பின்னர் தனுஷ், அந்த தமிழ் போராளியின் வரலாற்றை தெரிந்து கொண்டு லண்டன் தாதாவை எதிர்த்து போராடுகிறார்.

தொடர்ந்து கேங்ஸ்டர் கதைகளை எடுத்து வந்த கார்த்திக் சுப்புராஜ், இந்தமுறை இனவெறி அரசியலையும் புலம்பெயர்ந்து செல்பவர்களின் பிரச்சனையையும் சேர்த்து இந்த படத்தில் காண்பித்து உள்ளார் கார்த்திக் சுப்புராஜ். இப்படி ஒரு நிலையில் இந்த படத்தை கிழிகிழி என்று கிழித்துள்ளார் ப்ளூ சட்டை மாறன். இறுதியாக தனுஷ் நடிப்பில் வெளியாகி ரசிகர்களால் கொண்டாடப்பட்ட கர்ணன் படத்தை கூட கழுவி தான் ஊற்றி இருந்தார்.

-விளம்பரம்-
Advertisement