தனுஷ் என்னை காதலித்தார் – தனுஷ் வெற்றிமாறன் படத்தில் நடித்த இளம் சிங்கிள் நடிகை பேச்சால் சர்ச்சை (இருக்குற பிரச்சனை போதாதா)

0
1127
Dhanush
- Advertisement -

தன் நடிப்பை பார்த்து தனுஷ் தன் மீது காதலில் விழுந்ததாக இளம் நடிகை பேசியுள்ள விஷயம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் தனுஷ். சமீப காலமாக இவர் நடித்த பல படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று இருந்தது. அதிலும் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த படங்கள் அனைத்தும் வேற லெவலில் ஹிட் அடித்தது. 2007 ஆம் ஆண்டு தனுசை வைத்து பொல்லாதவன் என்ற படத்தை இயக்கி சினிமா உலகில் இயக்குனராக அறிமுகமானார். பின் இவர் தனுஷை வைத்து ஆடுகளம், வடசென்னை, அசுரன் என ப்ளாக் பஸ்டர் படங்களை தந்து உள்ளார்.

-விளம்பரம்-

இதில் வட சென்னை திரைப்படம் அணைத்து தரப்பு மக்களையும் கவரும் வண்ணம் இருந்தது. இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, சமுத்திரகனி, கிஷோர், அமீர், தீனா என்று பலர் நடித்து இருந்தனர். இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ், தனுசுக்கு இணையாக படு லோக்கல் வட சென்னை பாஷயில் பேசி மிரளவைத்து இருந்தார். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ், வடசென்னையில் நடித்தது குறித்தும், வெற்றிமாறன் மற்றும் தனுஷ் குறித்தும் பேசிய இருந்தார்.

இதையும் பாருங்க : தளபதி 66 பூஜை வீடியோ வெளியானது – ராஷ்மிகா இன்னும் என்னலாம் பண்ணி இருகாங்க பாருங்க.

- Advertisement -

ஐஸ்வர்யா மீது காதலில் விழுந்த தனுஷ் :

அதில், “வெற்றிமாறனின் வழிகாட்டுதலினால்தான் வடசென்னை படத்தில் என்னால் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்த முடிந்தது. வடசென்னை படத்தில் காதல் காட்சிகளில் என்னை வெற்றிமாறன் மிகவும் தத்ரூபமாக நடிக்கவைத்தார். என் நடிப்பை பார்த்து தனுஷிற்கு காதல் வந்துவிட்டது. தனுஷ் போன்ற ஒரு சிறந்த நடிகர் என் நடிப்பை பார்த்து அசந்துபோனது மிகப்பெரிய விஷயம். வடசென்னையில் எனக்கு கிடைத்த பெயர் நினைத்து பார்க்காதது என்று கூறி இருக்கிறார்.

Vada chennai movie promo | Dhanush-Ayswaryarajesh

தனுஷ் விவாகரத்து :

இவர் இப்படி பேசி இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. நடிகர் தனுஷ், ரஜினி மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு லிங்கா மற்றும் யாத்ரா என்று இரண்டு மகனும் இருக்கின்றனர். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் இவர்கள் இருவரும் தங்கள் 18 ஆண்டு கால திருமண வாழ்க்கையை முறித்துக்கொண்டு பிரிவதாக அறிவித்து இருந்தனர்.

-விளம்பரம்-

தனுஷ் அமலா பால் சர்ச்சை :

இவர்களை சேர்த்து வைக்க இரு குடும்பங்களும் பல முயற்சிகளை எடுத்த போதிலும் அவை அனைத்தும் தோல்வியில் முடிவடைந்தது. அதே போல தனுஷ் ஏற்கனவே அமலா பாலுடன் படு நெருக்கமாக இருந்ததால் தான் தன் மனைவியை பிரிந்துவிட்டார் என்று கூட பல விமர்சனங்கள் எழுந்தது. இப்படி ஒரு நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் இப்படி பேசி இருப்பது நெட்டிசன்கள் மத்தியில் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.

தனுஷ்ஷின் அடுத்த படங்கள் :

தற்போது தனுஷ் தி கிரேட் மேன் என்ற தனுஷ் திரைப்படத்தில் நடித்து முடித்து உள்ளார். இதை தொடர்ந்து தனுஷ் அவர்கள் திருச்சிற்றம்பலம், நானே வருவேன், வாத்தி, sir ஆகிய பல படங்களில் நடித்து வருகிறார். இப்படி தொடர்ந்து தனுஷ் பல படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அதேபோல் ஐஸ்வர்யா மியூசிக் ஆல்பத்தை இயக்கி வெளியிட்டு இருக்கிறார். சமீபத்தில் தான் இதன் அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகி இருந்தது

Advertisement