தளபதி 66 பூஜை வீடியோ வெளியானது – ராஷ்மிகா இன்னும் என்னலாம் பண்ணி இருகாங்க பாருங்க.

0
561
Thalapathy66
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் ரஜினிகாந்த், கமலுக்கு அடுத்தபடியாக முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவருடைய படத்தை இயக்குவதற்காக பல இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் வரிசையில் காத்து கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லலாம். அந்த அளவுக்கு இவருடைய படங்கள் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. கடைசியாக விஜய் நடித்த மாஸ்டர் படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து தற்போது தளபதி விஜய் அவர்கள் நெல்சன் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து இருக்கிறார். மேலும், இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது.

-விளம்பரம்-

இந்த படத்தில் செல்வராகவன், பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ் உட்பட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள். தற்போது இந்த படத்தின் இறுதி கட்ட பணிகள் மும்முரமாக நடந்து கொண்டிருக்கின்றது. மேலும், இந்த படத்தின் அரபிக்குத்து பாடல், ஜாலியோ ஜிம்கானா பாடல்கள் வெளியானதை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. அதுமட்டும் இல்லாமல் இந்த பாடலுக்கு ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை என பலரும் நடனமாடி வீடியோக்களை சோசியல் மீடியாவில் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள்.

இதையும் பாருங்க : அபிராமியை தொடர்ந்து பிக் பாஸில் இருந்து வெளியேறிய நபர் – ஐயோ இவரா ? ஏற்க மறுக்கும் நெட்டிசன்கள்.

- Advertisement -

விரைவில் வெளியாக இருக்கும் பீஸ்ட் :

பீஸ்ட் படம் வருகிற ஏப்ரல் 13 ஆம் தேதி உலகமெங்கும் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் விஜய் ‘வீர ராகவன்’ என்ற பெயரில் நடித்து இருக்கிறார். ட்ரெய்லரில் ஒரு மால்லை பயங்கரமான தீவிரவாதிகள் ஹைஜாக் பண்ணுகிறார்கள். எதர்ச்சையாக கடத்தப்படும் மால் ஒன்றில் விஜயும் சிக்கிக் கொள்கிறார். விஜய் மால்லையும், மக்களையும் எப்படி காப்பாற்றினார்? இதன் பின்னணி என்ன? என்பது தான் சுவாரஸ்யமே என்று கூறப்படுகிறது.

வம்சி இயக்கத்தில் விஜய் :

இந்த நிலையில் விஜய் அவர்களின் அடுத்த படத்துக்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று கொண்டு இருக்கிறது.விஜய்யின் ‘தளபதி 66’ படத்தை வம்சி பைடிபள்ளி இயக்க இருக்கிறார் . இவர் தமிழில் ஏற்கனவே கார்த்தி, நாகர்ஜுனா நடித்த தோழா படத்தை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமில்லாமல் வம்சி தெலுங்கு சினிமா உலகில் முன்னணி இயக்குனர் ஆவார்.

-விளம்பரம்-

விஜய்க்கு ஜோடியான ராஷ்மிகா :

மேலும், இந்த படத்தை தில் ராஜு தயாரிக்கிறார் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அதுமட்டுமில்லாமல் இயக்குனர் வம்சி- தயாரிப்பாளர் தில் ராஜூ இருவரும் இணைந்து பல படங்களில் பணிபுரிந்து இருக்கிறார்கள். இப்படி ஒரு நிலையில் இந்த படத்தின் பூஜை சமீபத்தில் தான் நடைபெற்று இருந்தது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க இருக்கிறார்.

This image has an empty alt attribute; its file name is 1-108-1024x761.jpg

தளபதி 66 பட பூஜை வீடியோ :

இவர் விஜய்யின் தீவிர ரசிகை என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று தான். ஏற்கனவே இவர் விஜய்யின் மாஸ்டர், பீஸ்ட் ஆகிய படங்களிலேயே விஜய்க்கு ஜோடி சேருவதாக இருந்தது. ஆனால், எப்படியோ மிஸ் ஆகிவிட்டது. இந்த நிலையில் தளபதி 66 படத்தில் இவர் விஜய்க்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார். பட பூஜையில் விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா எடுத்துக் கொண்ட படங்கள், அவர் எந்தளவுக்கு பெரிய விஜய் ரசிகை என்பதைக் காட்டுகின்றன. இப்படி ஒரு நிலையில் அந்த வீடியோவும் வெளியாகி இருக்கிறது.

Advertisement