இன்னும் எத்தனை படத்த காபி அடிப்ப.! அட்லீயை கழுவி ஊற்றிய தனுஷ் பட தயாரிப்பாளர்.!

0
994
Atlee
- Advertisement -

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் இயக்குனர் அட்லி. மெர்சல் படத்திற்கு பின்னர் இவர் தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய இயக்குனர் பட்டியலில் சேர்ந்து விட்டார். என்னதான் ஷங்கரின் உதவி இயக்குநராக பணியாற்றி வந்தாலும் இவர் இயக்கி வரும் படங்கள் என்னவோ பெரும்பாலும் காப்பி கதைகளாகத்தான் இருந்து வருகிறது.

-விளம்பரம்-
Image result for mersal

இவர் இறுதியாக இயக்கிய மெர்சல் திரைப்படம் மாபெரும் வசூல் சாதனைகளை குவித்தது இருப்பினும் இந்த படம் ரஜினி நடித்த மூன்று முகத்தின் அச்சு அசல் காப்பி என்று பலருக்கும் பச்சையாக தெரிந்தது. அதுபோக தற்போது அட்லீ இயக்கி வரும் விஜய் 63 படமும் காப்பி சர்ச்சையில் சிக்கியுள்ளது.

இதையும் படியுங்க : காஜல் அகர்வால் தங்கையா இது.! இவங்களுக்கு இவ்ளோ பெரிய மகன் இருக்காங்களா.! 

- Advertisement -

இந்த நிலையில் அட்லி இயக்கிய மெர்சல் திரைப்படத்தின் கதையை ஏற்கனவே பதிவு செய்திருப்பதாக பிரபல தயாரிப்பாளர் கதிரேசன் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார். மேலும், அட்லியை கடுமையாக விமர்சித்துள்ளார்.தயாரிப்பாளர் கதிரேசன் பொல்லாதவன் ஆடுகளம் ஜிகிர்தண்டா போன்ற பல படங்களை தயாரித்துள்ளார்.

Related image

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற இவர் இயேசுவின் மூன்று முகம் படத்தின் ரீமேக் உரிமை தன்னிடம் தான் இருந்தது என்று ஆனால், அட்லீயின் மெர்சல் படத்தை பார்த்த போது மூன்று முகம் படத்தின் கதை போலவே இருந்ததால் எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது என்றும் கூறியுள்ளார். அந்த படத்தை லாரன்ஸ் வைத்து எடுக்கவும் திட்டம் தீட்டி இருந்தது. ஆனால், அதற்குள்ளாகவே அட்லீ அந்த அந்த படத்தை எடுத்து விட்டார். அட்லீயால் எனக்கு 4 கோடி நஷ்டம் இன்னும் எத்தனை காலம்தான் அட்லி இது போன்று காப்பி எடுத்து படம் எடுத்துக் கொண்டே இருப்பார் என்று ஆட்சியை கடுமையாக விமர்சித்துள்ளார்.

-விளம்பரம்-
Advertisement