இவர விட இவர் 2 வயசு பெரியவரு – அப்புறம் எப்படி ஒன்னா படிச்சாங்க? தனுஷே சொன்ன உண்மை. வீடியோ இதோ.

0
1505
baba
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் மக்களின் பேராதரவை பெற்று விடுகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான ‘குக்கூ வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றது. முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தற்போது இரண்டாம் சீசன் ஒளிபரப்பாகிவந்தது . முதல் சீசனை விட இந்த சீசனுக்கு எக்கச்சக்க வரவேற்பு கிடைத்தது. அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வந்த கோமாளிகள் தான். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ஷோக்களில் இந்த நிகழ்ச்சி டாப் லிஸ்ட்டில் இருந்தது.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-31-573x1024.jpg

இந்த நிகழ்ச்சியில் ரசிகர்களுக்கு பரிட்சயமான பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். அதில் பாபா பாஸ்கரும் ஒருவர். இந்த சீசனில் இவர் குக்கா இல்லை கோமாளியா என்று பலருக்கும் ஒரு சந்தேகம் தான், காரணம் இவர் கோமாளிக்கு இணையாக செய்யும் சேட்டைகள் தான். பாபா பாஸ்கர் தமிழிலில், 2006 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான ‘திருவிளையாடல் ஆரம்பம்’ படத்தின் மூலம் நடன இயக்குனராக அறிமுகமானார். அதன் பின்னர் பொல்லாதவன், வில்லு, வேட்டைக்காரன், சிறுத்தை, மாரி என்று பல படங்களில் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

இதையும் பாருங்க : 2020-ல் டாப் சின்னத்திரை ஆண்கள். ஆரிக்கு கிடைத்த இடம். சனம் ஷெட்டி காட்டம். (சோம் சேகரை விடவா ஆரி கம்மி ஆகிட்டாரு)

- Advertisement -

ஆரம்பத்தில் இவர் குரூப் டான்சராக தான் இந்தார். அதன் பின்னர் இவரை நடன இயக்ககுனராக அறிமுகம் செய்து வைத்தது தனுஷ் தான். இவர் பெரும்பாலான தனுஷ் படங்களில் பணியாற்றி விடுவார்.அதனால் இவர் எந்த பேட்டியில் பேசினாலும் தனுஷுக்கு நன்றி தெரிவித்துவிடுவார்.இப்படி ஒரு நிலையில் பாபா பாஸ்கரும் தனுஷும் 8 ஆம் வகுப்பு வரை ஒன்றாக படித்தவர்கள் என்று சமீபத்தில் சமுக வலைதளத்தில் ஒரு செய்தி வைரலாக பரவியது.

பாபா பாஸ்கர் பிறந்தது 1981ல் தனுஷ் பிறந்தது 1983ல். அப்படி இருக்க இவர்கள் இருவரும் எப்படி ஒன்றாக படித்து இருக்க முடியும் என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால்,அந்த சந்தேகத்தை தீர்த்து வைக்கும் விதமாக நடிகர் தனுஷ், கொடி படத்தின் இசை வெளியீட்டு விழாவில், பாபா பாஸ்கரும் நானும் 8 ஆம் வகுப்பு வரை ஒன்றாக படித்தவர்கள் என்று கூறியுள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement