தனுஷ் நடிப்பில் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான ‘மாரி 2’படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற தவறியது. இருப்பினும் இந்த படத்தில் இடம்பெற்ற ‘ரௌடி பேபி’ வீடியோ பாடல் பல்வேறு சாதனைகளை படைத்திருந்தது.
2018 ஆம் ஆண்டில் அடுத்தடுத்து ஹிட் பாடல்களை வழங்கிய யுவன் ஷங்கர் ராஜா இசையில் ஆண்டின் இறுதியில் ‘மாரி 2’ படத்தின் ‘ரௌடி பேபி’ பாடல் படத்தின் பிரமாண்ட பாடலாக மட்டுமல்லாமல், யூடியூபில் மிகவும் குறுகிய காலத்தில் (2 வாரம்) 130 மில்லியன் பார்வைகளை கடந்து மிகப்பெரிய சாதனையை படைத்தது.
யூடியூபில் தமிழ் பாடல்களில் நம்பர் 1 இடத்தை பிடித்ததன் மூலம் உலகளாவிய மேடையில் தமிழ் இசையை மீண்டும் உலக அளவில் கவனிக்க வைத்திருக்கிறது. முதன்முறையாக ஒரு தமிழ் வீடியோ பாடல் பட்டியலில் நம்பர் 1 இடத்தை பிடிப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
தனுஷ் நாயகனாக நடித்த இப்படத்தில் நாயகியாக சாய் பல்லவி நடித்திருந்தார். இந்த பாடலுக்கு பிரபுதேவா நடனம் அமைத்திருந்தார். வெளியான ஆறு மாதத்திலேயே 500 மில்லியன் பேர் இந்த பாடலை பார்த்திருப்பது சாதனையாகியுள்ளது.