‘நீங்க எப்படி ஹாலிவுட் படத்துல வந்தீங்க ? அமெரிக்கா பிரெஸ் மீட்டில் பத்திரிகையாளர் கேட்ட கேள்விக்கு தனுஷ் சொன்ன பதிலால் அதிர்ந்த அரங்கம்.

0
565
dhanush
- Advertisement -

ஹாலிவுட் படத்தில் இடம் பெற்றது குறித்து தனுஷ் கூறி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் தனுஷ். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் இறுதியாக தனுஷ் நடித்த மாறன் திரைப்படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாகி இருந்தது. இந்த படத்தை கார்த்திக் நரேன் இயக்கி இருந்தார். இந்த படத்தில் மாளவிகா மோகனன், சமுத்திரகனி, ஸ்மிருதி வெங்கட் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள்.

-விளம்பரம்-

இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. மேலும், இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. அதற்கு பின் தனுஷ் அவர்கள் நானே வருவேன் என்ற படத்தில் நடித்து இருக்கிறார். கலைப்புலி எஸ் தாணு உடைய வி கிரியேஷன்ஸ் இந்தப் படத்தை தயாரித்து இருக்கிறது. செல்வராகவன் இந்த படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்து இருக்கிறார்.

- Advertisement -

இதையும் பாருங்க : பல ஆண்டு கழித்து சமூக சேவைக்காக லாரன்சுக்கு கிடைத்த கௌரவ – அதையும் அம்மா கையால் வாங்க வைத்து அழகு பார்த்த தருணம்.

தனுஷ் நடிக்கும் படங்கள்:

தற்போது இந்த படத்தின் இறுதி கட்ட பணிகள் நடந்து கொண்டு இருக்கிறது. கூடிய விரைவில் இந்த படம் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து தனுஷ் அவர்கள் வாத்தி, sir போன்ற பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இதனை அடுத்து தனுஷ் அவர்கள் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் ஆகஸ்ட் 18-ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

-விளம்பரம்-

மாதேஸ்வரன்-தனுஷ் கூட்டணி:

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனுஷ்- இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் மீண்டும் இணைந்துள்ளனர். இந்த படத்தில் படத்தில் தனுஷ், நித்யா மேனன், பிரியா பவானி ஷங்கர், ராஷி கண்ணா, பாரதிராஜா மற்றும் பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும், இந்த படத்தின் முதல் சிங்கிளான தாய்க்கிழவி பாடல் சமீபத்தில் தான் வெளியாகியிருந்தது. அதனை தொடர்நது இயக்குனர் மாதேஸ்வரன் -தனுஷ் கூட்டணியில் கேப்டன் மில்லர் திரைப்படம் உருவாக இருக்கிறது.

தி கிரே மேன் படம்:

அதேபோல் தனுஷ் நடித்த ஹாலிவுட் படம் தி கிரே மேன். இந்த படம் அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் ஜூலை 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதன் பின்னர் ஜூலை 22 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இந்த படம் வெளியிடப்படுகிறது. இந்த படத்தில் தனுஷ் முக்கிய வேடத்தில் நடித்து இருக்கிறார். இந்நிலையில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற தி கிரே மேன் படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் தனுஷ் கலந்து இருந்தார். அப்போது, தனுஷிடம் நீங்கள் எப்படி இந்த படத்தில் வந்தீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ‘நான் எப்படி இந்த படத்தில் வந்தேன் என்பது எனக்கே தெரியவில்லை என்று கூறியதும் அங்கு இருந்த அனைவரும் சிரிப்பலையில் ஆழ்ந்தனர்.

ஹாலிவுட் படத்தில் இடம் பெற்றது குறித்து தனுஷ் சொன்னது:

மேலும், தொடர்ந்து பேசிய தனுஷ் நடிகர்களை தேர்வு செய்யும் ஏஜென்சி என்னை தொடர்புகொண்டு ஹாலிவுட் படமொன்றில் நடிக்கிறீர்களா? என்று கேட்டனர். பின் அவர்கள் உங்களுக்கு சம்மதமா? என்று கேட்டார். நான் அவர்களிடம் தயவுசெய்து என்ன படம் என்ற விவரத்தை சொல்லுங்கள் என்றேன். அதற்கு அவர்கள் தி கிரே மேன் படம் குறித்து தெரிவித்தனர். அதன் பின்னர் இது மிகப் பெரும் ஹாலிவுட் ப்ராஜெக்ட் என்பதை உணர்ந்தேன் என்று கூறி இருந்தார். மேலும், 2009இல் மார்க் கிரீனி எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டு தான் இந்த படத்தை ரூசோ பிரதர்ஸ் உருவாக்கி இருக்கின்றனர். இந்த படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Advertisement