தயவு செய்து இதை செய்யாதீங்க, தனுஷின் டாக்டர் சகோதரி அறிவுரை. வைரலாகும் வீடியோ.

0
1988
dhanush
- Advertisement -

உலகம் முழுவதும் கொரோனாவின் கோரத்தாண்டவம் தலைவிரித்து ஆடிக் கொண்டிருக்கின்றது. கொரோனாவினால் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்து உள்ளார். கொரோனாவை ஒழிக்க உலகம் முழுவதும் உள்ள மருத்துவர்கள் போராடி வருகிறார்கள். ஆனால், இன்னும் கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் நடிகர் தனுஷின் தங்கை கொரோனா குறித்தும், கொரோனா சமயங்களில் செய்யக்கூடாத விஷயங்கள் குறித்தும் வீடியோ ஒன்று போட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பது, தமிழ்நாட்டில் கொரோனவினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டுதான் இருக்கிறது.

-விளம்பரம்-

குறிப்பாக சென்னையில் தினமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிர் இழப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. அதிலும் சென்னை தவிர கிராமப்புறங்களில் கொரோனாவால் பாதிக்கப்படும் மக்கள் மருத்துவ வசதி இல்லாமல் அநியாயமாக இறந்து விடுகிறார்கள். இதற்கெல்லாம் காரணம் என்னவென்று பார்த்தால், மக்கள் சிலர் கொரோனா அறிகுறி இருந்தால் நம்மை கொண்டு போய் அடைத்து விடுவார்கள் என்ற அச்சத்தினால் பலரும் கொரோனா அறிகுறிகள் இருந்தாலும் வெளியில் சொல்லுவதில்லை.

இதையும் பாருங்க : திருமண விஷயத்தில் மூக்கை நுழைத்த லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு வனிதா கொடுத்த பதிலடி.

- Advertisement -

இன்னொன்று ஆரம்பத்திலேயே கொரோனா அறிகுறிஇருந்தால் மருத்துவரை அணுகினால் உடனடியாக குணப்படுத்தலாம். ஆனால், மக்களின் கனவு குறைவினால் இறுதிக்கட்டத்தில் மருத்துவமனைக்கு செல்வதால் தான் ஏற்படுகிறது. முதலில் நீங்க வெளியே போனாலும் சரி இல்லை நீங்க வெளிஊருக்கு சென்றாலும் சரி உங்களை 15 நாட்களுக்கு தனிமை படுத்துங்கள். ஏதாவது சளி, இருமல் என்ற அறிகுறி வந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுங்கள். தயவுசெய்து பயந்துகொண்டு வீட்டில் யாரும் இருக்காதீர்கள். சின்ன சின்ன அறிகுறிகள் தான் என்று நினைத்து கொண்டு மருத்துவமனைக்கு செல்லாமல் இருப்பது மிகவும் தவறு. வீட்டில் அனைவரும் தனிமை உடனே இருங்கள்.

Dhanush's sister misses family reunion: Nothing in this world equals  quality time with your loved ones - Movies News

மாஸ்க் அணிந்து கொண்டு வெளியில் செல்லுங்கள். கொரோனாவை குறித்து யாரும் பயப்படாதீர்கள், கவலைப்படாதீர்கள். நல்ல ஆரோக்கியமான உணவை சாப்பிடுங்கள், தண்ணீர் நிறைய குடியுங்கள். வைட்டமின் சி, டி எடுத்து கொள்ளுங்கள். இதெல்லாம் எடுத்தாலே போதும் நீங்கள் ஆரோக்கியமாக இருப்பீர்கள். உங்களுக்கு தெரிந்தவர்களோ, வாட்ஸ் அப்பிலோ மருந்தை பார்த்துக்கொண்டு பக்கத்தில் இருக்கும் மெடிக்கல் ஷாப்பில் மருந்து வாங்கி சாப்பிடாதீர்கள். மருத்துவர் ஆலோசனை இல்லாமல் எந்த ஒரு மருந்தையும் சுயமாக எடுக்கக்கூடாது. சரியான நேரத்தில் மருத்துவரை அணுகினால் மட்டும்தான் இந்த நோயிலிருந்து உங்களையும் நாட்டையும் காப்பாத்த முடியும் என்று கூறினார். தனுஷ் சகோதரி கார்த்திகா மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement