ஒரே ஊரில் இருந்தும் பார்க்க முடியல – புகைப்படத்தை பகிர்ந்து தனுஷ் சகோதரி உருக்கம்

0
29824
dhanush

தமிழ் சினிமா உலகில் நுழைந்த குறுகிய காலத்திலேயே தனெக்கென ஒரு பாதையை உருவாக்கியவர் தனுஷ். இவர் நடிகர் மட்டுமில்லாமல் தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர், திரைக்கதையாசிரியர், திரைப்பட தயாரிப்பாளர் என பல முகங்களை கொண்டவர். கடந்த ஆண்டு இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளி வந்த “அசுரன்” படம் அசுர வசூல் வேட்டையை செய்தது. சமீபத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் செந்தில் குமார் இயக்கத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளிவந்த படம் “பட்டாஸ்”. இந்த வருடம் தொடக்கத்திலேயே தனுஷ் அவர்கள் வேற லெவல் மாஸ் காட்டி உள்ளார்.

தற்போது இளம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து உள்ள படம் “ஜகமே தந்திரம்”. தற்போது கொரோனா வைரஸ் காரணத்தால் படப்பிடிப்புகள் நிறுத்தபட்டுள்ள நிலையில் அணைத்து நடிகர்களும் வீட்டில் தான் இருந்து வருகிறார்கள் இந்த நிலையில் தனுஷின் சகோதரி தனது குடும்ப புகைப்படத்தை பதிவிட்டு உருக்கமான பதிவை பகிர்ந்துள்ளார்.

இதையும் பாருங்க : துப்பாக்கி படத்தில் விஜய்யின் தங்கையாக நடித்த நடிகையா இது. வைரலாகும் புகைப்படம்.

- Advertisement -

நடிகர் தனுஷ்க்கு, இயக்குனர் செல்வராகவனை தவிர இரண்டு சகோதரிகள் உள்ளார்கள். சமீபத்தில் தனுஷ்ஷின் சகோதரி கார்த்திகா தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது, அவர்களை மாதம் இருமுறையாவது சென்று பார்த்து விடுவேன். ஆனால் தற்போது ஒரே ஊரில் இருந்தும் அவர்களை பார்க்க முடியாமல் தவிக்கிறேன். குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவதை விட சிறந்தது உலகில் எதுவும் கிடையாது. அவர்களை ரெம்பவும் மிஸ் பண்றேன் என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. சமீபத்தில் கூட தனுஷிற்கு ஷூட்டிங் எதுவும் இல்லாத இந்த சமயத்தை பயன்படுத்திக் கொண்டு தன்னுடைய குடும்பத்துடன் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்று உள்ளார். அங்கு தன்னுடைய சகோதரி மகள் ஒருவருக்கு தாய்மாமன் என்ற முறையில் தனுஷ் தன்னுடைய மடியில் உட்கார வைத்து மொட்டை அடித்து உள்ளார்.

-விளம்பரம்-
View this post on Instagram

#Dhanush With His Sister's Daughter At #Tirupathi

A post shared by Behind Talkies (@behindtalkies) on

அப்போது குழந்தைக்கு தாய்மாமன் என்ற முறையில் தனுஷ் முதல் முடி எடுத்து உள்ளார். தனுஷ் அருகில் இயக்குனர் செல்வராகவனும் அமர்ந்திருக்கிறார். அவரும் மொட்டை போட்டுள்ளார். அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவந்தது. ஆனால், இந்த மகிழ்ச்சியான தருணம் நடந்த சில நாளிலேயே கொரோனா வைரசஸ் முன் எச்சரிக்கையாக தனுஷ் குடும்பத்தினர் அனைவரும் அவரவர் குடும்பத்துடன் தனிமைப்படுத்தி கொண்டு இருக்கின்றனர்.

Advertisement