தீனா, நந்தா படத்தில் நடித்த இவரை ஞாபகம் இருக்கா ? திருமணத்திற்கு பின் எப்படி இருக்காங்க பாருங்க.

0
4910
sheela

தமிழ் சினிமாவில் எத்தனையோ பேர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் நடிகர்களாக மாறியவர்கள் லிஸ்டில் நடிகை ஷீலாவும் ஒருவர். இவர் தமிழில் பூவே உனக்காக, கோல்மால், மாயா, நந்தா உள்ளிட்ட பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருந்தார். அதன் பிறகு ஷீலா அவர்கள் இளவட்டம், வீராசாமி, சீனா தானா 001, கண்ணா, வேதா உட்பட பல படங்களில் ஹீரோயினாகவும் நடித்து இருந்தார். இவர் தமிழ் சினிமா உலகில் தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி இருந்தார். இவர் குழந்தை நட்சத்திரமாக 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளார்.

நடிகை ஷீலா தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களாக அஜித், விஜய் ஆகிய நடிகர்களின் படங்களிலும் கூட நடித்து உள்ளார். இவர் தமிழ் மொழி மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். இவர் கடைசியாக கன்னட மொழியில் ஹெபர் என்ற படத்தில் தான் நடித்திருந்தார்.

இதையும் பாருங்க : எங்க கல்யாணம் முஸ்லீம் முறைப்படியும் நடக்கல இந்து முறைப்படியும் நடக்கல – 29 ஆண்டு கழித்து மனைவிக்கு ரியாஸ் கான் கொடுத்த சர்ப்ரைஸ்.

- Advertisement -

பின் இவருக்கு சினிமா பட வாய்ப்புகள் குறையத் தொடங்கிய உடன் இரண்டு மூன்று வருடங்களாக சினிமாவில் நடிக்காமல் இருந்தார். பின் வாய்ப்புகளும் கிடைக்கவில்லை. இதனால் இவருக்கு திருமண ஏற்பாடுகள் தொடங்கியது. இவர் கடந்த சில ஆண்டுக்கு முன்னர் தான் தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார்.

This image has an empty alt attribute; its file name is 2-10.jpg

ஆந்திராவை சேர்ந்த தொழிலதிபர் சந்தோஷிக்கும் ஷீலாவுக்கும் சென்னையில் எளிமையான முறையில் திருமணம் நடந்தது. இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டனர். தற்போது இவரது திருமண புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement