சந்தானத்தின் தில்லுக்கு துட்டு 2 படத்தின் விமர்சனம்.!

0
1435
Dhilluku-Duddu-2
- Advertisement -

நடிகர் சந்தானம் நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான ‘தில்லுக்கு துட்டு ‘ படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாவது பாகம் நேற்று (பிப்ரவரி 7) வெளியாகியது. இந்த படத்தை பற்றிய விமர்சனத்தை இங்கே காணலாம்.

-விளம்பரம்-

படம்:- தில்லுக்கு துட்டு 2
இயக்குனர்:- ராம் பாலா
நடிகர்கள் : – சந்தானம்,ஷராதா ஷிவதாஸ், மொட்டை ராஜேந்திரன், பிபின், ஊர்வசி மற்றும் பலர்,
தயாரிப்பு : – சந்தானத்தின் Handmade Film
இசையமைப்பளார் :-  ஷபீர்
வெளியான தேதி:- 07-01-2018

- Advertisement -

கதைக்களம் :

முதல் காட்சியிலேயே மருத்துவமனையில் வேலை செய்யும் மாயாவிடம் (ஷராதா ஷிவதாஸ்} யாராவது ‘ஐ லவ் யூ’ சொன்னால் உடனே அவரை காவல் காக்கும் பேய் அடிச்சு தூக்கிவிடும் என்பது போல காட்சியில் துவங்குகிறது. பின்னர் காலனியில் இருக்கும் சந்தானம் ஐயப்பனுக்கு மாலை போட்டுகொண்டு மிகவும் நல்லவராக தோன்றும் காட்சி தொடர பின்னர் தான் தெரிகிறது சந்தானம் ஐயப்பனுக்கு மாலை போட்டததால் தான் அப்படி நல்லவராக நடித்தார் என்று (பிஸ்தா படத்தில் கார்த்திக் போல).

-விளம்பரம்-

சந்தானம் ஏரியாவில் இருக்கும் அக்கம் பக்கத்தினரை சந்தானம் சதா டார்ச்சர் செய்து கொண்டும் கலாய்த்துக்கொண்டும் இருக்கிறார். இந்நிலையில் மாயா வேலை பார்க்கும் மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர் ஒருவர் அவரிடம் ஐ லவ் யூ சொல்லிவிட்டு பேயிடம் அடிவாங்குகிறார். பின்னர் அவருக்கு ஒரு யோசனை வருகிறது. அவருடைய பக்கத்து வீட்டுக்காரரான வெள்ளை விஜி (சந்தானம்) மீது கடுப்பில் இருக்கும் அந்த டாக்டர், விஜியை பழிவாங்க மாயாவிடம் லவ் வர செய்கிறார்.

மாயாவில் காதலில் விழும் விஜி, ஐ லவ் யூ சொல்ல, மாயாவை காவல் காக்கும் பேய்க்கும், சந்தானத்தி பொரட்டி போட்டு எடுத்து விடுகிறது. பின்னர் தான் தெரிகிறது அந்த பெண்ணின் தந்தை ஒரு மலையாள சூனியக்காரர் என்றும் அந்த பெண்ணிடம் யார் காதலை சொன்னாலும் அவர்களை போய் அடித்து தும்சம் செய்யுமாறு ஒரு சூனியத்தை வைத்துள்ளார் என்றும் தெரியவருகிறது. இதனால் அந்த மந்திரவாதியை சந்திக்க செல்கிறார் சந்தானம். இறுதியில் என்ன ஆனது மாயாவின் மீதிருந்த அந்த சூனியத்தை சந்தானம் நீக்கினாரா என்பது தான் மீதிக்கதை.

ப்ளஸ் :

படத்தின் மிகப்பெரிய ப்ளஸ் என்றால் அது சந்தானமும் , மொட்டை ராஜேந்திரனும் தான். இது போன்ற சந்தனத்தை தான் ரசிகர்களும் எதிர்பார்க்கின்றனர். காமடியோடு படத்தில் திகளையும் நிறைய அளித்துள்ளனர். சவுண்ட் எபக்ட்ஸ்ஸில் நிச்சயம் நன்றாக ஸ்கொர் செய்திருக்கிறார் இசையமைப்பாளர். காதல் காட்சிகளை குறைத்து காமெடியை அதிகரித்தது மிக பெரிய ப்ளஸ். மேலும், கடைசி நேரத்தில் மொட்டை ராஜேந்திரனின் ஒரு கதவு சீன் வரும் பாருங்க அதற்கு தொடர்ந்து 10 நிமிடம் சிரித்துகொண்டே இருப்பீங்க.

மைனஸ் :

காமெடி படமாக எடுத்துக்கொண்டால் படத்தில் சொல்லிக்கொள்ளும் அளவிற்க்கு பெரிய மைனஸ் எதுவும் இல்லை. அதே போல படத்தின் இரண்டாம் பாதியில் பல இடத்தில் மலையாலத்திலேயே வசனத்தை பேசுவது கொஞ்சம் வெறுப்பை தருகிறது. ஆனால், அதற்கு சப் டைட்டில் போடறாங்க அதனால ஓகே. கதாநாயகியை மையப்படுத்தி நகரும் கதை என்றாலும் அவருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது போல தோன்றவில்லை.

இறுதி அலசல் :

பெரும்பாலும் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் அவ்வளவாக ரசிகர்களை கவருவதில்லை. ஆனால், இந்த படம் ஒரு விதிவிலக்காக அமைந்துள்ளது. சந்தானம் இஸ் பேக் என்றே சொல்லலாம். கண்டிப்பாக வயிறு குலுங்க சிரித்து பார்க்ககூடிய படமாக இது அமைந்துள்ளது. மொத்தத்தில் இந்த படத்திற்கு நமது மதிப்பு 7.5/10.

Advertisement