இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி புதிய ஹேர் ஸ்டைலில் இருக்கும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்திய அணியின் முன்னாள் கேப்டனாக இருந்த தோனி இந்தியாவிற்கு உலகக்கோப்பைகளை பெற்று தந்ததுமில்லாமல் மிகச்சிறந்த பேட்ஸ்மேனாகவும்,உலகின் தலைசிறந்த விக்கெட் கீப்பராகவும் திகழ்ந்தவர். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஒய்வு பெற்றாலும் உள்ளூர் போட்டிகளில் விளையாடி வருகிறார் தோனி.
தோனி எப்போதுமே அவரது ஹேர் ஸ்டைலுக்கு பெயர்போனவர். இப்படி ஒரு நிலையில் புதிய ஹேர் ஸ்டைலில் இருக்கும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரபல இயக்குனர் அட்லீயும் இதே விதமான ஸ்டைலான ஹேர் ஸ்டைலில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலானது நினைவிருக்கிறதா. அவருக்கும் இதே நபர் தான் முடி வெட்டி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தோனி மற்றும் அட்லீக்கு மட்டுமல்ல இந்தியாவில் இருக்கும் பல பிரபலங்கள் இவரிடம் முடி வெட்டியுள்ளனர்.
இதையும் பாருங்க : பாக்கியலட்சுமி சீரியல் நடிகர்களின் ஒரு நாள் சம்பளம் – அட, இருக்கருதுலேயே இவருக்கு தான் அதிக சம்பளம்.
இவருடைய பெயர் ஆலிம் ஹக்கிம், கிரிக்கெட் வீரர்களாக கோலி, சச்சின், கே எல் ராகுல், ஹர்திக் பாண்டியா என்று பல்வேறு கிரிக்கெட் வீரர்களும் பல்வேரு பாலிவுட் நடிகர்களும் இவரிடம் ஹேர் ஸ்டைல் செய்து கொண்டு உள்ளனர். இவர் பல்வேரு சலூன்களை வைத்து நடத்தி வருகிறார். அதில் ஸ்பெஷல் ஸ்டைலிஸ்ட்டிடம் முடி வெட்ட வேண்டும் என்றால் ஒரு விலை.
சாதாரண ஹேர் ஸ்டைலிஸ்ட்டிடம் முடி வெட்ட வேண்டும் என்றால் ஒரு விலை. 18.000 முதல் 2000 வரை இவரது சலூனில் முடி வெட்ட வசூலிக்கப்படுகிறது. அதிலும் இவர் முடி வெட்டி ஹேர் ஸ்டைல் செட் செய்ய வேண்டும் என்றால் 25,000 ஆகுமாம். இருப்பினும் இவரது ஹேர் கட்டில் மயங்கி பல பிரபலங்கள் இவரிடம் தான் முடி வெட்டுகிறார்களாம்.