இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரானது 14 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்த நிலையில் கடந்த மார்ச் மாதம் 26-ஆம் தேதி முதல் இந்த ஆண்டிற்கான 15-வது சீசனானது நடைபெற்று வருகிறது. இந்த தொடர் துவங்கி ஒரு வாரத்திற்கு மேல் ஆகிய நிலையில் தற்போது இத்தொடரில் பங்கேற்றுள்ள 10 அணிகளும் மும்முரமாக தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இதில் சென்னை அணியினை தலைமையேற்று நடத்தி வந்த தோனிக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் ஒரு மிகப்பெரிய வரவேற்பு இருந்து வந்தது.
ஐபிஎல் தொடர் ஆரம்பத்தில் இருந்து சென்னை அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த தோனி இந்த ஆண்டு ஐபிஎல் தொடரிலும் கேப்டனாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னர் தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அதனைத் தொடர்ந்து சென்னை அணியின் புதிய கேப்டனாக ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா அறிவிக்கப்பட்டார்.
புதிய கேப்டன் ஜடேஜா :
நடப்பு சாம்பியனான சிஎஸ்கே ஜடேஜாவின் தலைமையில் சிறப்பாக செயல்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்து வருத்தம் அளித்தது இருப்பினும் சென்னை அணி எப்போதும் ரசிகர்களை மகிழ்விக்க தவறாது என்பதன் காரணமாக இன்னும் சென்னை அணியின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு உச்சத்தில் தான் உள்ளது.எது எப்படி இருப்பினும் தோனி கேப்டன் பொறுப்பில் இருந்து தோனி விலகியது ரசிகர்கள் மத்தியில் பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியது.
ரஜினி ஸ்டைலில் விளம்பரம் :
இந்த நிலையில் Ipl தொடருக்காக csk சார்பில் தோனி நடித்த விளமப்ரதிற்கு தடை விதிக்கப்ட்டுள்ளது. ஐபிஎல் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பாக Csk சார்பில் விளமபரம் ஒன்று வெளியிடபட்டு இருந்தது. அதில் ரஜினி ஸ்டைலில் தோனி தோன்றி இருந்தது ரசிகர்களை கவர்ந்து இருந்தது.அந்த விளம்பரத்தில் தோனி ஓட்டி வரும் பேருந்து ஒன்று கடையில் ஒளிபரப்பாகும் ipl போட்டியை காண நிற்பது போல காண்பிக்கப்பட்டு இருந்தது.
விளம்பரத்திற்கு தடை :
இதனால் அங்கு மற்ற வானங்களும் நிற்கப்ட்டு டிராபிக் ஜாம் ஆகிறது. அப்போது அங்கு வரும் டிராபிக் போலீசார் இதுகுறித்து கேட்கையில் டிரைவராக இருக்கும் தோனி ‘சூப்பர் ஓவர் போகுது இல்ல’ என்று சொன்னதும் அந்த ட்ராபிக் போலீசும் ஓகே தல என்று சொல்லிவிட்டு கண்டுகொள்ளாமல் செல்வார். தற்போது இந்த வீடியோ தான் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருப்பதோடு தடை செய்யப்பட்டு இருக்கிறது. சாலை விதிகளை மீறும் வண்ணம் இந்த வீடியோ அமையப்பெற்று இருப்பதாக இந்த வீடியோ நீக்கப்பட்டு இருக்கிறது.