இவர் தான் விபத்தில் உயிரிழந்த தோனியின் முதல் காதலியா ? வெளியான தெளிவான புகைப்படம்.

0
5019
dhoni
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனி.இவர் இந்தியாவிற்கு உலகக்கோப்பைகளை பெற்று தந்ததுமில்லாமல் மிகச்சிறந்த பேட்ஸ்மேனாகவும்,உலகின் தலைசிறந்த விக்கெட் கீப்பராகவும் திகழ்ந்தவர். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஒய்வு பெற்றாலும் உள்ளூர் போட்டிகளில் விளையாடி வருகிறார் தோனி. தோனிக்கு திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் தோனி, சாக்ஷிக்கு முன்னர் காதலைத்தவரின் புகைப்படம் என்று சமூக வலைதளத்தில் ஒரு புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-

கடந்த 2016 ஆம் ஆண்டு பாலிவுட் இயக்குனர் நீரஜ் பாண்டே இயக்கிய கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாற்றை பற்றி எடுக்கப்பட்ட படம் ரசிகர்களை மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதில் தற்போது தோனி திருமணம் செய்துகொண்டுள்ள சாக்ஷிக்கு முன்னர் தோனி பிரியங்கா என்ற பெண்ணை காதலித்து இருப்பது போன்ற காட்சிகள்” தோனி ” படத்தில் படமாக்கபட்டிருக்கும்.

இதையும் பாருங்க : சூப்பர் ஸ்டார் செய்த உதவி – அறுவை சிகிச்சைக்கு பின் உருக்கமான வீடியோ வெளியிட்ட பொன்னம்பலம்.

- Advertisement -

அந்த படத்தை பார்த்த ரசிகர்களும் தோனியின் முதல் காதலி பிரியங்கா யார் என்று அறிந்துகொள்ள மிகுந்த ஆவல் காட்டினார்கள். அதே போல தோனி எங்கு சென்றாலும் உங்களின் முதல் காதலி யார்? யார் ? என்று பலரும் கேட்டு கொண்டுதான் இருக்கின்றனர். அதற்கு தோனி பதில் எல்லாம் மோனாலிசா ஓவியத்தை போன்ற ஒரு மர்மமான புன்னகை மட்டும் தான்.

தோனியின் முதல் காதலியான பிரியங்கா ஒரு விபத்தில் இருந்துவிட்டார். ஆனால், அவரது புகைப்படத்தை யாரும் கண்டது இல்லை. இப்படி ஒரு நிலையில் தோனியின் முதல் காதலியான பிரியங்காவின் புகைப்படம் என்று சமூக வலைதளத்தில் ஒரு புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. ஆனால், உண்மைகள் அதில் இருப்பது தோனி மனைவி சாக்ஷி தான். சில ஆண்டுகளுக்கு முன்னர் இவர்கள் இருவரும் முசோரியில் எடுத்துக்கொண்ட புகைப்படம் தான் அது.

-விளம்பரம்-
Advertisement