டைரி படம் எப்படி இருக்கு ? இதோ முழு விமர்சனம். எப்படி தான் இந்த கதையெல்லாம் Choose பண்றார் அருள்நிதி.

0
1115
dairy
- Advertisement -

அருள்நிதி நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் தான் D பிளாக் இந்த படத்தை எருமை சாணி யூடியூப் சேனல் உரிமையாளர் விஜய் இயக்கி இருந்தார். இந்த படம் வெளிவந்து மக்களின் மனதில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது படம் பார்த்தவர்களும் படத்தை பற்றி கொடுத்த விமர்சனங்களும் நன்றாகவே இருந்தது. ஆனால் இந்த படத்தில் பாராட்டுக்கள் எல்லாமே இயக்குனர் விஜய் கிடைத்தது. ஆம் இது இவரின் முதல் படம் என்பதால் படம் பார்த்த ரசிகர்கள் இவரின் முதல் படம் என்பது போலவே தோன்றவில்லை. அந்த அளவிற்கு படத்தை அருமையாக எடுத்துள்ளார் என்ன கூறினார்கள். இதனைத் தொடர்ந்து அருள்நிதி நடிப்பில் டைரி திரைப்படம் இன்று வெளியாகி இருக்கிறது.

-விளம்பரம்-

டைரி :-

- Advertisement -

நடிகர் அருள்நிதி நடிப்பில் பைவ் ஸ்டார் கிரியேஷன் தயாரிப்பில், இயக்குனர் இன்னாச்சி பாண்டியன் இந்த படத்தை இயக்கியுள்ளார், உதயநிதி ஸ்டாலின் இந்த படத்தை வெளியிட்டுள்ளார். தொடர்ந்து திரில்லர் படங்களாக மற்றும் வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களையே தேர்ந்தெடுத்து அதில் மட்டும் நடித்து வருகிறார் அருள்நிதி. ஏன் இது போன்ற திரில்லர் படங்களில் நடித்து வருகிறார் என்று தெரியவில்லை. ஆனால் அருள்நிதியின் நடிப்பில் இன்று வெளியாய் இருக்கும் டைரி திரைப்படமும் ஒரு திரில்லர் திரைப்படம் தான் என்று ஏற்கனவே தெரிந்த தகவல்தான். பல எதிர்பார்ப்புகளுடன் வெளிவந்த டைரி படம் எப்படி இருக்கு வாருங்கள் பார்க்கலாம்.

முக்கியதுவம் இல்லாத சில
கதாபாத்திரங்கள் :-

-விளம்பரம்-

படம் போட்டதும் எப்பொழுதும் திரில்லர் படங்கள் எப்படி தொடங்குமோ அதுபோல் இந்த படமும் தொடங்குகிறது. படத்தில் வரும் குற்றங்களை யார் செய்தது ? என்ன நடந்தது ? எப்படி நடந்தது ? இதுபோன்று படத்தில் வரும் கேள்விகள் நம்மளையும் படத்தின் ஓட்டத்தின் கூடவே நம்மளையு் கொண்டு செல்ல தூங்குகிறது. படத்தில் அருள்நிதி நடிப்பில் எவ்வித குறையும் சொல்ல முடியாத அளவிற்கு நடிப்பில் தொம்சம் செய்து எடுத்திருக்கிறார். இருந்தாலும் கதையில் பவித்ரா, ஷாரா போன்றவர்களின் கதாபாத்திரங்களுக்கு பெரிய அளவில் முக்கியத்துவம் ஒன்றும் கொடுக்கவில்லை, எதற்கு இவர்கள் இருக்கின்றன என தோன்றி இருந்தாலும். அவ்வப்போது வந்து செல்கின்றன இந்த கதாபாத்திரங்கள.

எடுபடாத காமெடி காட்சிகள் :-

படத்தின் காமெடி காட்சிகளை ஷாரா, சாம்ஸ் இருவரும் வரும் சில காமெடி காட்சிகள் நம்மை சிரிக்க வைத்தாலும் சில காமெடி காட்சிகள் பெரிதாக ஒன்றும் எடுபடவில்லை என்றும் சில சாட்சிகளின் டபுள் மீனிங் காமெடி என்று சில காமெடியும் வைத்திருக்கிறார் இயக்குனர். படத்தின் முக்கியமான காட்சிகள் பல காட்சிகளில் சிஜே வேலைப்பாடுகள் மட்டமான வேலைபாடுகளாக உள்ளனர். இந்த சிஜே வேலைபாடுகளால் படத்தின் தரம் சற்று குறைவதாக தெரிகிறது படத்தின் ஒட்டத்தையும் அது பாதிக்கின்றது. படத்தின் சிஜே வேலைகளை இன்னும் அதிக கவனத்துடன் பார்த்திருக்க வேண்டும் படத்தின் பின்னணி இசை நம்மளை படத்துடன் பயணிப்பதற்கு மிக உதவியாக இருக்கிறது.

திரில்லர் படங்களுக்கே உண்டான கான்செப்ட் இல்லை :-

இந்த படத்தில் ஊட்டியில் காவல் ஆய்வாளராக பணியில் சேரும் அருள்நிதிக்கு வழக்கம் போல் போலீஸ் படங்களில் புதிதாக சேரும் நபர்களுக்கு பழைய கேஸ் ஒன்றை எடுத்துக் கொடுப்பார்கள் அதுபோல் நம் அருள்நிதிக்கும் 16 வருட பழைய கேஸ் பைல் ஒன்று தருகிறார்கள். ஆனால் அருள்நிதி அந்த கேஸ்சை பின் தொடரும் போது அந்த கேஸ் பற்றி பல ஆச்சரியப்படுத்தும் உண்மை தகவல்கள் வெளி வருகின்றனர். திரில்லர் படங்களில் முதலில் இருந்து பட முடியும் வரை இந்த தவறை அவர் செய்திருப்பாரோ இல்லை இவர் செய்திருப்பாரோ என்றபடி ஒவ்வொரு நபரையும் நாமே சந்தேகித்து இவர் செய்திருக்கலாம் என்று எண்ணும்படி வைப்பார்கள் ஆனால் முடிவு யாரும் நினைக்காத படி இருக்கும் ஆனால் டைரி படத்தில் அந்த அது மாதிரியான கதைப்போக்கு இல்லாதது வருத்தமளிக்கிறது.

படம் எப்படி இருந்தது :-

படம் எப்படி இருக்கிறது என்று கேட்டால் படைத்தேன் சிஜெ வேலைபாடுகளில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம். கதைப்போக்கு மற்றும் உருவாக்கத்திலும் இன்னும் மாற்றம் கொண்டு வந்திருக்கலாம் ஒரு சில குறைகளினால் சிறந்த தமிழ் திரில்லர் படங்களின் வரிசையில் டைரி படம் இடம்பெற தவறிவிட்டது. இருந்தாலும் படம் பார்ப்பவர்களுக்கு புதியதாக ஒரு படம் பார்த்த அனுபவத்தை கொடுக்கிறது. திரில்லர் படங்களாக தேர்ந்தெடுத்து பார்க்கும் நபர்களுக்கு இந்த படம் பார்க்கலாம். கதையின் படத்தின் இரண்டாம் பாகத்தில் வரும் டுவிஸ்ட்கள் அனைத்தும் உங்களை ஆச்சரியப்படுத்தும் விதத்தில் இருப்பதால் முதல் பாதியை பொறுத்திருந்து நீங்கள் பார்க்க வேண்டி இருக்கும். பார்க்கலாம் ஒரு தடவை தியேட்டர் சென்று படத்தை பார்க்கலாம்.

Advertisement