தனுஷ் படத்தின் இறுதியில் ‘A Film A R Rahman’ என்று போட்டது ஏன் ? அவரே கொடுத்த விளக்கத்தை பாருங்க.

0
543
arr
- Advertisement -

தனுஷ் நடித்த படத்தை இயக்கியது ஏ ஆர் ரகுமானா? பூரிப்பில் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள். தமிழ் நடிகர்களில் ஒரு சில நடிகர்களுக்கு மட்டுமே தான் பாலிவுட், ஹாலிவுட் வாய்ப்பு கிடைக்கும். அதிலும் பெரும்பாலும் பாலிவுட் நடிகர்கள் தான் ஹாலிவுட்டில் கால்தடம் பதித்து வந்தனர். தமிழ் சினிமாவை பொறுத்த வரை ரஜினி, நொபொலீயன் என்று ஒரு சிலர் மட்டுமே கால்பதித்து இருந்தனர்.

-விளம்பரம்-
Atrangi Re Movie Review: So Complicated, Yet So Simple! A Twisted Love  Triangle With More Than Three Angles

தனுஷின் பாலிவுட் பயணம் :

ஆனால், இளைய தலைமுறை நடிகர்களில் யாரும் ஹாலிவுட் படத்தில் நடித்தது இல்லை. அந்த குறையை தீர்த்தவர் நடிகர் தனுஷ் தான். தமிழில் பல படங்களில் தனது அசுரத்தனமான நடிப்பை நிரூபித்தவர் தனுஷ். இவர் கோலிவுட்டில் மட்டுமில்லாமல் பாலிவுட், ஹாலிவுட் என பல மொழிகளில் அசத்தி வருகிறார். அந்த வகையில் கடந்த 2013 ஆம் ஆண்டு ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் வெளியான ‘ராஞ்சனா’ படத்தின் மூலம் பாலிவுட்டில் கால் பதித்தார்.

- Advertisement -

பாலிவுட்டிலும் வெற்றி படங்களை கொடுத்த தனுஷ் :

அந்த படம் பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதன் பின்னர் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், அக்ஷரா ஹாசனுடன் இணைந்து பால்கி இயக்கத்தில் இணைந்து தனுஷ் ‘ஷமிதாப்’ படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தில் நடிகர் தனுஷ் வாய் பேச முடியாத கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இந்த படமும் மாபெரும் வெற்றியை பெற்றது. இந்த படத்திற்கு பின்னர் தனுஷ் பாலிவுட்டில் பயங்கர பிரபலமானார்.

’அத்ரங்கி ரே’ படத்தை இயக்கியது ஏ.ஆர்.ரஹ்மானா? - ரசிகர்கள் பூரிப்பு; இணையத்தில் வைரலாகும் இன்ஸ்டா போஸ்ட்!

‘அத்ரங்கி ரே ‘ – கலாட்டா கல்யாணம் :

இந்நிலையில் 6 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் ‘அத்ரங்கி ரே ‘ படத்தின் மூலம் தனுஷ் பாலிவுட்டில் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த திரைப்படம் தமிழில் ‘கலாட்டா கல்யாணம்’ என்ற பெயரில் வெளியாகி இருக்கிறது. மேலும், இந்த படம் வரும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு 24 ஆம் தேதி வெளியாகி இருந்தது. இந்த படத்தில் அக்ஷய்குமார், சாரா அலி கான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

-விளம்பரம்-

ஏ ஆர் இயக்கிய படமா ‘அத்ரங்கி ரே’

இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இவருடைய இசை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அதுமட்டுமில்லாமல் படத்தின் பாடல்கள் எல்லாம் ரிலீசுக்கு முன்பே ரசிகர்களை கவர்ந்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், படம் ரசிர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்த நிலையில் ‘அத்ரங்கி ரே ‘ படத்தின் முடிவில் a film by என இயக்குனர் பெயர் போடாமல் படத்தின் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் பெயர் வந்திருந்தது.

ரஹ்மான் கொடுத்த விளக்கம் :

இதை கண்டு ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சி ஆனார்கள். பின் இதனை அடுத்து ரசிகர் ஒருவர் ஏ ஆர் ரகுமான் அவர்களுக்கு இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை போட்டு உள்ளார். அதில் அவர் கூறியது, உங்களுக்காகவே ‘அத்ரங்கி ரே ‘ படம் பார்த்தேன். படத்தில் இசை அருமையாக உள்ளது. எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. படத்தை உங்களுக்கு அர்ப்பணிப்பது போல a film by ஏ ஆர் ரகுமான் என்று இயக்குனர் ஆனந்த் ராய் போட்டு இருப்பது எங்களை பிரமிப்படைய செய்தது என குறிப்பிட்டிருந்தார். மேலும், இவருடைய பதிவிற்கு ஏ ஆர் ரகுமான் அவர்கள் கூறி இருப்பது, ரொம்ப நன்றி. ஆனந்த் ராய் போன்ற இயக்குனர்கள் இந்தியாவுக்கு தேவை. இசை அமைப்பாளர்கள் மீது அவர் கொண்டிருந்த நம்பிக்கையும், மரியாதையும் தான் என்னை மேலும் மெனக்கெட வைக்க உதவியது என தெரிவித்திருந்தார். இவருடைய பதிவு தற்போது ரசிர்கள் மத்தியில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

Advertisement