முதல் படம் வெளியாகும் முன்பே இரண்டு படங்களில் கமிட் ஆன ஷங்கர் மகள் – Nepotism குறித்து ஆத்மீகாவின் சூசக பதிவு.

0
941
aathmika
- Advertisement -

இயக்குனர் ஷங்கர் மகளை நடிகை ஆத்மிகா மறைமுகமாக தாக்கி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் உலகில் பிரம்மாண்டத்திற்கு பெயர் போனவர் இயக்குனர் சங்கர். இவருடைய இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றுத் தந்திருக்கின்றது. அதுமட்டுமில்லாமல் இவருடைய படங்கள் எல்லாமே பிரம்மிக்க வைக்கும் அளவிற்கு இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

-விளம்பரம்-

தற்போது இவர் ராம் சரணை வைத்து படம் இயக்கி வருகிறார். இந்த சூழ்நிலையில் இயக்குனர் சங்கரின் இரண்டாவது மகள் அதிதி சங்கர் தமிழ் சினிமா உலகில் கதாநாயகியாக களம் இறங்கி இருக்கிறார். தமிழ் சினிமா உலகில் முன்னணி ஹீரோவாக திகழ்ந்து கொண்டு இருக்கும் கார்த்தி படத்தில் தான் சங்கர் மகள் அதிதி நடித்து இருக்கிறார். கார்த்தி ஹீரோவாக நடித்து இருக்கும் படம் ‘விருமன்’. இந்த படத்தை இயக்குனர் முத்தையா இயக்கி வருகிறார்.

- Advertisement -

இதையும் பாருங்க : 10 ஆண்டுகள் கழித்து மீண்டும் Anchor ஆக களமிறங்கிய CWC 2 டைட்டில் வின்னர் கனி – எந்த டிவியில் தெரியுமா ?

விருமன் படம்:

கொம்பன் படத்திற்கு பிறகு கார்த்திக் மற்றும் முத்தையா இந்த படத்தில் இணைந்துள்ளார்கள். இந்த படத்தை சூர்யாவின் 2D என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மேலும், இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், சூரி, ராஜ்கிரண் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். விருமன் படமும் கிராமத்து கதையம்சத்தில் உருவாகி வருகிறது. இதனால் இந்த படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

-விளம்பரம்-

விருமன் ஆடியோ வெளியீட்டு விழா:

மேலும், இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தின் ரிலீஸ்க்காக ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர். சமீபத்தில் தான் இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா மிக பிரம்மாண்டமாக நடந்தது. இதில் கார்த்திக், சூர்யா, அதிதி உட்பட படக்குழுவினர் கலந்துக் கொண்டு சிறப்பித்திருந்தனர். இதை தொடர்ந்து சிம்புவின் கொரோனா குமார், எஸ் கேவின் ‘மாவீரன்’ என்று அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகி இருக்கிறார் அதிதி.

ஆத்மிகா போட்ட டீவ்ட்:

இந்த நிலையில் நடிகை ஆத்மிகா பதிவிட்டு இருக்கும் பதிவு தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சை கிளப்பி வருகிறது.ஆத்மிகா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், சிலருக்கு வாய்ப்புகள் ஈசியாக கிடைத்து விடுகிறது. மற்றவர்களின் நிலைமை பார்த்துக்கலாம் என்று பதிவு செய்திருந்தார். இதைப்பார்த்த ரசிகர்கள் பலரும் சங்கர் மகள் அதிதியை பற்றி தான் இவர் மறைமுகமாகக் கூறி இருக்கிறார் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

ஆத்மிகா திரைப்பயணம்:

தற்போது நடிகை ஆத்மிகாவின் பதிவு சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகையாக திகழ்ந்து கொண்டிருக்கிறார் ஆத்மிகா. இவர் மீசைய முறுக்கு படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகி இருந்தார். அதனைத் தொடர்ந்து இவர் கோடியில் ஒருவன், காட்டேரி, கண்ணை நம்பாதே போன்ற படங்களில் நடித்திருக்கிறார். இருந்தாலும் இவருக்கு எதிர்பார்த்த அளவு வாய்ப்புகள் இன்னும் அமையவில்லை.

Advertisement