10 ஆண்டுகள் கழித்து மீண்டும் Anchor ஆக களமிறங்கிய CWC 2 டைட்டில் வின்னர் கனி – எந்த டிவியில் தெரியுமா ?

0
134
- Advertisement -

குக் வித் கோமாளி பிரபலம் கனி மீண்டும் சின்னத்திரைக்கு வந்துள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் சூப்பர் டூப்பர் ஹிட்டான நிகழ்ச்சியில் ஒன்றாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி இருக்கிறது. இந்த நிகழ்ச்சி தொடங்கிய முதல் சீஸனில் இருந்தே மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. இதனால் இந்த நிகழ்ச்சி மூன்று சீசன்களை கடந்து இருக்கிறது.

-விளம்பரம்-

மேலும், புது வித்தியாசமான முறையில் இந்த சமையல் நிகழ்ச்சியை விஜய் டிவி அறிமுகம் செய்து இருக்கிறது. இதனால் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சிக்கு என்றே ஒரு பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து மூன்றாவது சீசனும் ஒளிபரப்பாகி நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். இந்த நிகழ்ச்சி சமையல் மட்டும் இல்லாமல் பலரையும் சிரிக்க வைக்கும் நிகழ்ச்சியாக இருக்கிறது.

- Advertisement -

குக் வித் கோமாளி சீசன் 3 :

இந்த நிகழ்ச்சியில் சீசனுக்கு சீசன் போட்டியாளர்கள் மற்றும் கோமாளிகள் மாறினாலும் கடந்த 3 சீசன்களாக மாறாமல் இருப்பது நிகழ்ச்சியின் நடுவர், தொகுப்பாளர் தான். இந்த நிகழ்ச்சிக்கு நடுவர்களாக வெங்கடேஷ் பட் மற்றும் தாமு இருக்கிறார்கள். வழக்கம் போல் குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சி இந்த ஆண்டு தொடங்கப்பட்டது. இதில் அந்தோணிதாசன், கிரேஸ் கருணாஸ், மனோபாலா, சந்தோஷ் பிரதாப், ராகுல் தாத்தா, வித்யூலேகா, ரோஷினி, ஸ்ருதிகா, அம்மு அபிராமி, தர்சன் என்று பல பிரபலங்கள் கலந்து கொண்டு இருந்தார்கள்.

டைட்டில் வின்னர்:

இந்த முறை நிகழ்ச்சியில் பல வித்தியாசமான கான்செப்ட்களை கொண்டு வந்து இருந்தார்கள். சமீபத்தில் கோலகலமாக குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சி முடிவடைந்தது. இதில் ஸ்ருத்திகா டைட்டில் வின்னர் ஆனார். இந்த நிலையில் குக் வித் கோமாளி பிரபலம் காரக்குழம்பு கனி மீண்டும் சின்னத்திரைக்கு வந்து உள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் கனி. இவர் பிரபல இயக்குனரான அகதியனின் மகளாவார். அதோடு இவர் நடிகை விஜயலட்சுமியின் அக்கா என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

கனி குறித்த தகவல்:

கனி ஆடை வடிவமைப்பாளராக இருந்து வருகிறார். மேலும், இவர் 10 ஆண்டுகளுக்கு முன்னர் மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சொல் விளையாட்டு ‘ என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி இருந்தார். இருந்தாலும், இவரை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தியது குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சி தான். அது மட்டுமில்லாமல் அந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரும் காரக்குழம்பு கனி. அதற்குப் பிறகு இவர் தொலைக்காட்சி பக்கமே வராமல் இருந்தார்.

மீண்டும் சின்னத்திரையில் கனி:

இந்த நிலையில் மீண்டும் கனி சின்னத்திரைக்கு வந்துள்ள தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, சன் தொலைக்காட்சியில் புத்தம் புதிதாக சமையல் நிகழ்ச்சி ஒன்று ஒளிபரப்பாக உள்ளது. ஆனால், அந்த நிகழ்ச்சி குறித்த தகவல் இன்னும் எதுவும் தெரியவில்லை. இந்த நிகழ்ச்சியில் கனி தொகுப்பாளராக களம் இறங்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement