தமிழ் சினிமா உலகில் அல்டிமேட் ஸ்டாராக பிரதிபலித்து கொண்டு இருப்பவர் நடிகர் அஜித் குமார். தற்போது தல அஜித்தின் “வலிமை” படம் குறித்து பல தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வருடம் அஜித் அவர்களின் நடிப்பில் வெளிவந்த ‘விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை’ ஆகிய இரண்டு படமுமே மக்களிடையே நல்ல வரவேற்பையும், வசூலையும் அள்ளித் தந்தது. மேலும், இந்த இரண்டு படங்களுமே ப்ளாக் பஸ்டர் படங்களாக அமைந்தது என்று கூட சொல்லலாம். நேர்கொண்ட பார்வை படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வினோத்தும், தயாரிப்பாளர் போனிகபூர் இருவரும் இணைந்து தல அஜித்தை வைத்து உருவாகி வருகிற படம் தான் “வலிமை”.
மேலும், இந்த வலிமை படத்திற்கான பூஜைகள் எல்லாம் போடப்பட்டு படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கி விட்டார்கள். இந்த படத்திற்கு ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா எனவும் தெரியவந்து உள்ளது. அதுமட்டும் இல்லாமல் நேர்கொண்ட பார்வை படத்தில் பணியாற்றிய அதே குழுவினரே அஜித்தின் வலிமைப் படத்திலும் பணியாற்றுகிறார்கள் எனவும் அறிவித்தார்கள். இந்நிலையில் தல அஜித் அவர்கள் வலிமை படத்தின் சூட்டிங்கிற்காக சென்னையில் இருந்து ஹைதராபாத்துக்கு சைக்கிளிலேயே சென்று இருக்கிறார் எனவும், அதுவும் 600 கிலோ மீட்டர் தூரம் சைக்கிள் மிதித்து கொண்டே சென்று இருக்கிறார் என்றும் கூறி வருகிறார்கள். அதோடு தல அஜித் அவர்கள் சைக்கிள் ஓட்டும் மாதிரி புகைப்படம் ஒன்றை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு உள்ளார்கள். இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது உண்மையா? பொய்யா? என்று ஆராய்ந்த போது இந்த புகைப்படம் பல ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது வலிமை படத்திற்கு முன்னரே எடுக்க பட்டது என்று நமக்கு தெரிய வந்துள்ளது.
இதையும் பாருங்க : தெறி பட வசனத்தை கோடீஸ்வரி நிகழ்ச்சியில் பேசி அசத்திய ராதிகா. வைரலாகும் வீடியோ.
இது குறித்த தகவலை தல அஜித்தும், படக்குழுவினரும் தெரிவித்தால் தான் தெரியும் எனவும் கூறப்படுகிறது. மேலும், தல அஜித் அவர்கள் வலிமை படத்திற்காக கடும் உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இதனால் அஜித் ரசிகர்கள் எல்லாம் பயங்கர குஷியிலும், உற்சாகத்திலும் உள்ளனர். ’விஸ்வாசம், வீரம், விவேகம், வேதாளம், நேர்கொண்ட பார்வை’ போன்ற பல படங்களில் பெப்பர் சால்ட் ஹேர் ஸ்டலில் நடித்த நம்ம தல அஜித் அவர்கள் இந்த வலிமை படத்தில் பிளாக் ஹேர் ஸ்டைலில் அதுவும் இளமை தோற்றத்துடன் நடிக்கிறார் என்ற தகவல் வெளிவந்து உள்ளது. இந்த படத்தில் தல அஜித் அவர்கள் போலீசாக நடிக்கிறார். ஹீரோயினியும் போலீஸ் கேரக்டர் தான் என்றும் சொல்லப்படுகிறது.
இந்த படத்தில் தல இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்றும் பேசப்படுகிறது. இந்த படத்தில் அதிரடி ஆக்ஷன் காட்சிகளும், பைக் ரேஸ் காட்சிகளும் கண்டிப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திரைப்படம் முற்றிலும் மாறுபட்ட கதைக்களமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்புடன் உள்ளனர் ரசிகர்கள். அதோடு இந்த படத்தில் அஜித்துடன் நடிக்க நடிகர், நடிகைகளை தேர்வு செய்தும் வருகிறார்கள். இந்த படத்தில் கார் ரேசிங் காட்சிகள் எடுப்பதற்கு ஹாலிவுட் கலைஞர்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றிருப்பதாக தகவல் கிடைத்து உள்ளது. வலிமை படம் அடுத்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என்றும் படக்குழுவினர் அறிவித்துள்ளார்கள்.