தமிழ் சினிமாவில் பல வருடங்களாக பிரபல நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகை ராதிகா. சினிமா பின்னணி கொண்ட பிரபலமாக இருந்தாலும் இவரது தனிப்பட்ட சிறப்பான நடிப்பால் தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்து தற்போதும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். ராதிகா திரையுலகுக்கு வந்து நாற்பதாண்டுகள் ஆகிவிட்டன. வெற்றிகரமாக கிழக்கே போன ரயில், இந்த நாற்பதாண்டுகளில் அரசியல், சினிமா, சின்னத்திரை என்று சகல திசைகளிலும் பயணம் செய்து சாதித்திருக்கிறது.
வாணி-ராணி தொடரில் இரட்டை வேடங்களில் கலக்கிக்கொண்டிருந்த இந்த நடிகவேளின் வாரிசு, சமீபத்தில் `சந்திரகுமாரி’ சீரியலில் வரலாற்று நாயகியாகப் புது அவதாரம்எடுத்தார். தற்போதும் திரைப்படங்களில் நடித்து வரும் ராதிகா பல ஆண்டுகளாக ராடன் என்ற தயாரிப்பு நிறுவனம் மூலம் பல சீரியல்களை தயாரித்து வருகிறார். இதுவரை சித்தி, அண்ணாமலை, செல்லமே செல்வி, வாணி ராணி, சின்ன பாப்பா பெரிய பாப்பா, சிவமயம், ருத்ரவீணை போன்ற பல சீரியல்களை தயாரித்துள்ளார்.
இதையும் பாருங்க : ஆயுத எழுத்து சீரியல் கலெக்டர் ஸ்ரீத்துவா இது. மேக்கப் இல்லாமல் எப்படி இருக்கார் பாருங்க.
இந்த நிலையில் நடிகை ராதிகா, கோடீஸ்வரி என்ற பிரம்மாண்ட நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறார். நடிகர் அமிதாப் பச்சன் நடத்திய கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியைப் போல் தமிழிலும் கோடீஸ்வரி என்ற நிகழ்ச்சி பின்னர் தமிழ் தெலுங்கு கன்னடம் என்று பல்வேறு மொழியில் ஒளிபரப்பானது. இந்த நிலையில் பெண்களுக்காக பிரத்யேகமாக “கலர்ஸ் தமிழ்” தொலைக்காட்சியில் இன்று முதல் ஒளிபரப்பாகவுள்ளது. சமீபத்தில் இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ ஒன்று வெளியாகி இருந்தது.
அதில் போட்டியாளர் ராதிகாவைப் பார்த்து நீங்கள் தெறி படத்தில் விஜய்க்கு அம்மாவாக நடித்திருந்தது மிகவும் பிடிக்கும் என்றார். உடனே ராதிகா தெறி படத்தில் விஜய் பேசிய வசனத்தை பேசி வசனத்தை பேசி அரங்கத்தை அதிர வைத்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. இந்த நிகழ்ச்சி இன்று இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பங்குபெற 3 ஆயிரம் பெண்கள் கலந்து கொண்ட நிலையில் 120 மட்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.