அஞ்சனா கேட்ட கேள்வியால் மேடையை விட்டு இறங்கி சென்றாரா அல்லு அர்ஜுன் ? அஞ்சனா அளித்த விளக்கம்.

0
876
anjana
- Advertisement -

புஷ்பா பட விழாவில் அஞ்சனா கேட்ட கேள்வியால் கடுப்பாகி அல்லு அர்ஜுன் மேடையில் இருந்து இறங்கி விட்டதாக பரவிய செய்திக்கு அஞ்சனா விளக்கமளித்துள்ளார். பிரபல சன் மியூசிக் தொலைக்காட்சியில் 10 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக இருந்து வந்தவர் வி ஜே அஞ்சனா. சன் ம்யூசிக் தொலைக்காட்சி ஆரம்பித்த காலத்தில் இருந்து தற்போது வரை பிரபலமான தொகுப்பாளினியாக இருந்து வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன் வெளியாகி சூப்பர் ஹிட் கொடுத்த கயல் படத்தில் நடித்த சந்திரனை கடந்த 2016 ஆம் ஆண்டு தொகுப்பாளினி அஞ்சனா திருமணம் செய்து கொண்டார்.

-விளம்பரம்-

அதோடு இவருக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தான் ஒரு அழகான ஆண் குழந்தை கூட பிறந்தது. குழந்தை பிறந்த பின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தலைகாட்டவில்லை என்றாலும் பட விழாக்களுக்கு தொகுப்பாளினியாக சென்று வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘புஷ்பா’ பட வெற்றி விழாவில் தொகுப்பாளினியாக இருந்தார்.

- Advertisement -

புஷ்பா வெற்றி விழா :

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘புஷ்பா’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என்று 5 மொழிகளில் வெளியாகி இருந்தது. இந்த படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில், சுனில் அனுசியா உட்பட பலர் நடித்துள்ளனர். மேலும், இந்த படம் மாபெரும் வெற்றியும் அடைந்துள்ளது. இப்படி ஒரு நிலையில் இந்த படத்தின் தமிழ் வெர்ஷனின் வெற்றி விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.

அஞ்சனாவால் கடுப்பானாரா அல்லு அர்ஜுன் :

இரவு நேரத்தில் நெடுநேரம் நடந்த விழாவில் அல்லு அர்ஜுன் தமிழில் பேசி அசத்தினார். அவர் பேசி முடித்து கிளம்பும் நேரத்தில் மேடையில் இருந்த அஞ்சனா அவரை ஒரு இரண்டு ஸ்டெப் நடனமாட சொன்னார். ஆனால், அஞ்சனாவின் கையைப் பிடித்து இறக்கி விட்டு மேடையிலிருந்து இறங்கிச் சென்றார் அல்லு அர்ஜுன். இந்த சாதாரணமான வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவ அஞ்சனா கேட்ட கேள்வியால் கடுப்பாகி மேடையிலிருந்து அல்லு அர்ஜுன் இறங்கி சென்றதாக காட்சிப்படுத்தப்பட்டு பெரும் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-

அஞ்சனா அளித்த விளக்கம் :

இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இப்படி ஒரு நிலையில் இந்த வீடியோ குறித்து தன் ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்திருக்கும் அஞ்சனா ‘ஏற்கனவே நிகழ்ச்சிக்கு கொடுக்கப்பட்டிருந்த நேரத்தை தாண்டி சென்று விட்டது, அதன் பின்னரே தான் நிகழ்ச்சி முடிவடைந்தது. நாங்கள் அவரை டான்ஸ் ஆடச் சொல்லி கேட்டோம். ஆனால், நேரமின்மையை மனதில்கொண்டு அவர் மிகவும் கனிவாக அதனை மறுத்து விட்டார், அவ்வளவுதான்’ என்று பதிவிட்டிருக்கிறார் அஞ்சனா.

அஞ்சனாவின் இந்த பதிவில் கமன்ட் செய்து இருந்த ட்விட்டர் வாசி ஒருவர் ‘ இந்த இக்கட்டான சூழ்நிலைக்காக வருந்துகிறேன். ஆனால் சமயோஜித புத்தி, தலைப்பை திசை திருப்புதல், சிரித்த முகம் ஆகியவை தான் அடுத்த செயலாக இருந்து இருக்க வேண்டுமே தவிர அந்தச் சூழ்நிலையில் விரும்பத்தகாத உரையாடலாக இருக்கக்கூடாது என்று பதிவிட்டு இருந்தார்.

எதையும் எடிட் செய்யலாம் :

இதற்கு பதில் அளித்த அஞ்சனா ‘என்ன உரையாடல்?! அந்த நேரத்தில் எந்த உரையாடலும் இல்லை. நாங்கள் வேறு எதையோ பேசிக்கொண்டிருந்தோம். வழக்கமான நிகழ்வுக்குப் பிறகு நடந்த விஷயங்கள். எதையும் எடிட் செய்யலாம், மேலும், எடிட்டிங் திறமையால் நான் வியப்படைகிறேன் என்று பதில் அளித்துள்ளார்.

Advertisement