சினிமாவைப் பொறுத்தவரை நடிகர் நடிகைகள் பார்ட்டி என்று சுற்றுவது வழக்கமான ஒரு விஷயம் தான் அதிலும் பிறந்தநாள் பாட்டு என்றால் சொல்லவா வேண்டும் ஒரு குடியும் கும்மாளமும் தான் அந்தவகையில் தமிழ் சினிமாவின் பிரபல நடிகையான அனுஷ்கா நேற்று (நவம்பர் 7) தனது 38வது பிறந்தநாளை கொண்டாடினார் தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகையான அனுஷ்கா 2005 ஆம் ஆண்டு தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகர்ஜூனா உடன் இணைந்து நடித்த ‘சூப்பர்’ என்னும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் தான் சினிமா திரை உலகிற்கு அறிமுகமானர். பின்னர் தமிழில் ‘இரண்டு’ என்னும் திரைப்படத்தில் மாதவனுடன் நடித்து அறிமுகமானார்.
அதன் பின்னர் தமிழில் விஜய், அஜித், விக்ரம், சூர்யா என்று பல்வேறு முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார் நடிகை அனுஸ்கா. இதுமட்டுமல்லாது தமிழ், தெலுங்கு என்று நடிகை அனுஷ்கா கடந்த 10 வருடங்களில் 40க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். துவக்கத்தில் இவர் கவர்ச்சி நாயகியாக நடித்தாலும் பின்னர் வரலாற்று புராண கதைகளில் நடிப்பதில் அதிக கவனம் செலுத்தி வந்தார். அதிலும் இவரது நடிப்பில் வெளியான ‘அருந்ததி’ திரைப்படம் மாபெரும் ஹிட் அடைந்ததை தொடர்ந்து கதாநாயகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இதையும் பாருங்க : பாரதி கண்ணம்மா சீரியல் நடிகையா இப்படி ஒரு ஆடைகளில். மாடல் அழகியல்லவா, அதான்.
அந்தவகையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நடிகை அனுஷ்கா ‘இஞ்சி இடுப்பழகி’ என்ற படத்தில் நடித்திருந்தார் இந்த படத்திற்காக தனது உடல் எடையை கூட்டினார் அனுஷ்கா. ஆனால், இந்த படத்திற்கு பின்னர் தனது உடல் எடையை குறைக்க மிகவும் கஷ்டப்பட்டு வந்தார். இதனால் பட வாய்ப்புகளும் சரியாக அமையவில்லை. ஆனால், பாகுபலி திரைப்படம் இவருக்கு ஒரு மிகப்பெரிய திருப்புமுனை படமாக அமைந்து இருந்தது. சமீபத்தில் கடின உடற்பயிற்சிகள் மூலம் தனது உடல் எடையை குறைத்த அனுஷ்கா மீண்டும் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் தற்போது நடித்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது நிசப்தம் என்ற படத்தில் லீட் ரோலில் நடித்துள்ளார் அனுஸ்கா. இந்த படத்தில் அனுஷ்கா அவர்கள் வாய் பேச முடியாத கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் இவர் ஓவியக் கலைஞராகவும் நடித்தும் உள்ளார். இந்த படத்தில் நடிகை அஞ்சலியும் நடித்துள்ளார். நேற்று அனுஷ்கா பிறந்தநாளை கொண்டாடியதை ஒட்டி அஞ்சலி தனது சமூக வலைதளத்தில் அனுஷ்காவுடன் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.
அந்த புகைப்படத்தில் அஞ்சலியை அலேக்காக தூக்கி போஸ் கொடுத்துள்ளார் அனுஷ்கா. இந்த புகைப்படம் நேற்று சமூக வளைத்ததில் வைரலாக பரவியது. இந்த நிலையில் அந்த புகைப்படத்தில் ஒரு டேபிளில் மதுவுடன் கூடிய க்ளாஸ் ஒன்று இருப்பதை கண்டு ரசிகர்கள் ஷாக்கடைந்துள்ளனர். இதனால் அனுஷ்கா மற்றும் அஞ்சலி இருவரும் குடி பார்ட்டியில் ஈடுபட்டார்களா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்ப துவங்கியுள்ளார்கள்.