நான் நடிக்க கூப்டதால, மாமன்னன் Dpய எடுத்து என் போன் நம்பர Block பண்ணாரா பஹத் – பத்திரிக்கை செய்திக்கு மோகன் பதிலடி.

0
2164
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனராக மோகன் ஜி திகழ்ந்து கொண்டிருக்கிறார். பழைய வண்ணார்பேட்டை என்ற படத்தின் மூலம் தான் மோகன் இயக்குனராக தமிழ் சினிமாவில் கால் அடி எடுத்து வைத்தார். பின் நீண்ட இடைவேளைக்கு பிறகு மோகன் அவர்கள் திரௌபதி என்ற படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் ஜாதி ரீதியாக பிற்போக்கு தனமான கருத்துகளை பேசியிருக்கிறது என்று சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

-விளம்பரம்-

இருந்தாலும் இந்த படம் மக்கள் மத்தியில் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இதனை அடுத்து இயக்குனர் மோகன் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த படம் ருத்ரதாண்டவம். இந்த படமும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தை மையமாக கொண்ட கதை. இந்தப் படத்தை குறித்தும் சோசியல் மீடியாவில் சில சர்ச்சைகள் எழுந்து இருந்தது. இப்படி இவர் இயக்கிய மூன்று படங்களும் விமர்சன ரீதியாக தோல்வி இருந்தாலும் சமூகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

- Advertisement -

இறுதியாக இவர் செல்வராகவனை வைத்து ‘பகாசூரன்’ படத்தை இயக்கி இருந்தார். இந்த படமும் முந்தைய படங்களை போலவே விமர்சனத்திற்கு உள்ளானது. இப்படி ஒரு நிலையில் மோகன் ஜி, பஹத் பாசிலை வைத்து ஒரு படத்தை இயக்க முயற்சித்ததாகவும் ஆனால், பஹத் பாஸில் மறுத்துவிட்டார் என்றும் செய்திகள் வெளியானது. சமீபத்தில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான மாமன்னன் படத்தில் பஹத் பாஸில் நடித்து இருந்தார்.

இந்த படத்தில் உதயநிதி மற்றும் வடிவேலு கதாபாத்திரத்தை விட இவர் நடித்த ரத்தினவேல் கதாபாத்திரத்தை தான் பலர் கொண்டாடினர். அதிலும் இந்த படம் OTTயில் வெளியான பின்னர் ரத்னவேல் கதாபாத்திரத்திற்கு பல்வேறு விதமாக ஜாதி பாடல்களை போட்டு ஆளாளுக்கு பஹத் பாசிலை சொந்தம் கொண்டாடினர். இதனால் தனது முகநூல் பக்கத்தில் வைத்திருந்த மாமன்னன் பட புகைப்படத்தை கூட பஹத் பாஸில் நீக்கி இருந்தார்.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் பஹத் பாஸில் அந்த புகைப்படத்தை நீக்க காரணம் மோகன் ஜி தான் என்ற புதிய சர்ச்சை எழுந்துள்ளது.மாமன்னன் படத்திற்கு பின்னர் மோகன் ஜி, பஹத் பாஸிலை சந்தித்து கதை சொன்னதாகவும் அதிலும் மாமன்னன் ரத்தினவேல் கதாபாத்திரத்தை ஹீரோவாக வைத்து அந்த படத்தை எடுக்க இருப்பதாக பஹத் பாஸிலிடம் கூறியாதகவும் பிரபல பத்திரிகைக்கு செய்தியை வெளியிட்டுள்ளது.

இப்படி ஒரு நிலையில் இது போன்ற மானங்கெட்ட மண்ணாங்கட்டி ரிப்போர்ட்டரே, இந்த செய்தி உண்மையில்லை என்று எழுதி இருப்பதை ஏன் புகைப்படத்தில் போடவில்லை. நீங்கள் ஜாதி வெறியுடன் படங்களுக்கு மார்க் போடுவீர்கள் என்று தெரியும், இப்போது ஜாதி வெறியோடு செய்திகளையும் போடுகிறீர்கள் என்று தெரிகிறது. ஆனால், நிச்சயமா பஹத் பாஸிலுடன் ஒரு படத்தை எடுத்த அதை செய்தியாக இந்த பத்திரிகையில் வரவைப்போம் என்று கூறியுள்ளார்.

Advertisement