பாலய்யாவிற்கு இப்படி ஒரு ரோல தான் யோசிச்சி வச்சி இருந்தேன்,ஆனா இதனால மிஸ் ஆகிடிச்சி – நெல்சன் சொன்ன உண்மை.

0
1747
Nelson
- Advertisement -

ஜெயிலர் படத்தில் தெலுங்கு நடிகர் ஒருவர் நடிக்க இருந்து முடியாமல் போனது குறித்து நெல்சன் அளித்திருக்கும் பேட்டி தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தற்போது சோசியல் மீடியா முழுவதும் ஜெயிலர் படம் குறித்த செய்திகள் தான் டிரெண்டிங்காக சென்று கொண்டிருக்கின்றது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக நெல்சன் திகழ்ந்து இருக்கிறார். கடைசியாக இவர் விஜய் வைத்து பீஸ்ட் படத்தை இயக்கியிருந்தார்.

-விளம்பரம்-

இந்த படம் மிகப்பெரிய அளவில் தோல்வி அடைந்தது. இருந்தாலும் தன்னம்பிக்கையை கைவிடாமல் ரஜினிகாந்தை வைத்து ஜெயிலர் படத்தை எடுத்திருக்கிறார். இந்த திரைப்படம் கடந்த 10 ஆம் தேதி வெளியாகி இருந்தது. இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்னன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, வசந்த் ரவி, தெலுங்கு நடிகர் சுனில், ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெரப் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்து இருக்கிறார்கள்.

- Advertisement -

ஜெயிலர் படம்:

பல எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் ஜெயிலர் திரைப்படம் பிரம்மாண்டமாக வெளியாகி இருக்கிறது. இந்த படம் திரையரங்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றது. அதுமட்டுமில்லாமல் இந்த படத்திற்கு யூடியூப் விமர்சகர்களும், பிரபலங்கள், ரசிகர்கள் என எல்லோருமே பாசிட்டிவான கமெண்ட்களை கொடுத்து வருகிறார்கள். அது மட்டும் இல்லாமல் இந்த படத்தின் மூலம் நெல்சன் கம்பேக் கொடுத்து விட்டார் என்றெல்லாம் கொண்டாடி வருகிறார்கள்.

படத்தின் வசூல்:

இந்த படத்தை ஒரு பேன் இந்தியா படமாக எடுக்கவே இயக்குனர் நெல்சன், மலையாள நடிகர் மோகன் லால், இந்தி நடிகர் ஜாக்கி ஷராப், கன்னட நடிகர் சிவராஜ்குமார் போன்றவர்களை நடிக்க வைத்து இருந்தார். அந்த வகையில் தெலுங்கு ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க தெலுங்கு நடிகர் சுனிலை போட்டு இருந்தார். ஆனால், மற்ற நடிகர்களை போல் அல்லாமல் இவருக்கு காமெடியான கதாபாத்திரமே கொடுக்கப்பட்டு இருந்தது.

-விளம்பரம்-

மேலும், இந்த கதாபத்திரம் தெலுங்கு நடிகர் பாலய்யாவை குறிப்பிட்டே நெல்சன் வைத்து இருக்கிறார் என்று பலர் கேலி செய்து வந்தானர். இந்த நிலையில் ஜெயிலர் படத்தில் பிரபல நடிகர் ஒருவரை நடிக்க முடியாமல் போன தகவல் தற்போது வைரலாகி வருகிறது. அதாவது, சமீபத்தில் இயக்குனர் நெல்சன் அவர்கள் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர், தெலுங்கு மொழியில் பிரபலமான நடிகராக திகழும் பாலகிருஷ்ணாவை இந்த படத்தில் நடிக்க வைக்க திட்டமிட்டு இருந்தோம்.

படம் குறித்து சொன்னது:

ஆனால், அந்த கதாபாத்திரம் முழுமை அடையாததால் அவரை நடிக்க வைக்க முடியாமல் போனது என்று கூறியிருக்கிறார். ஒருவேளை நடிகர் பாலகிருஷ்ணன் இந்த படத்தில் நடிந்திருந்தால் இந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு, தமிழ் நடிகர்களை ஒரே படத்தில் காண்பித்த பெருமை நெல்சனுக்கு வந்து சேர்ந்திருக்கும் என்றெல்லாம் ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

Advertisement