உச்ச நடிகரின் நடிப்பை கேலி செய்துள்ள ஜெயம்ரவி, போட்டுடைத்த விக்ரம் – விஜய், மகேஷ் பாபு பெயரை இழுக்கும் நெட்டிசன்கள்.

0
465
vikram
- Advertisement -

ஜெயம் ரவி கலாய்த்த நடிகர் விஜய்யா? மகேஷ் பாபுவா? என்று நெட்டிசன்கள் எழுப்பும் சர்ச்சை சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமாவின் 70 ஆண்டு கனவான வரலாற்று சிறப்புமிக்க காவியங்களில் ஒன்றான அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் கதையை தற்போது திரைப்படமாக இயக்குநர் மணிரத்னம் இயக்கி இருக்கிறார். இந்த கதையை பல பேர் முயற்சி செய்து இருந்தார்கள். ஆனால், அதை மணிரத்னம் தான் சாதித்து காட்டி இருக்கிறார். மேலும், பொன்னியின் செல்வன் படம் இரண்டு பாகங்களாக உருவாகி இருக்கிறது.

-விளம்பரம்-

அதுமட்டும் இல்லாமல் மணிரத்னத்தின் திரை வாழ்க்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு மிக பிரம்மாண்டமாக இந்த திரைப்படம் தயாராகி இருக்கிறது. இந்த படத்தில் விக்ரம், பிரகாஷ் ராஜ், பார்த்திபன், கார்த்தி, ரவி, விக்ரம் பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ரகுமான், கிஷோர், அஸ்வின், நிழல்கள் ரவி, ரகுமான், லால், மோகன் ராமன், பாலாஜி சக்திவேல் என சினிமா உலகில் உள்ள பல முன்னணி நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார். இந்த படத்தில் ரவிவர்மன் ஒளிப்பதிவாளராகவும், தோட்டாதரணி கலை இயக்குனராகவும் பணியாற்றி இருக்கிறார்கள்.

- Advertisement -

இதையும் பாருங்க : அன்று மஹாலக்ஷ்மி, இன்று திவ்யா – சீரியல் நடிகைகள் வாழ்க்கை பிரச்னைகளில் அடிபடும் ஈஸ்வர் பெயர்

பொன்னியின் செல்வன் படம்:

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்த பொன்னியின் செல்வன் படம் சமீபத்தில் தான் பிரம்மாண்டமாக வெளியாகி இருக்கிறது. மேலும், தமிழ் ரசிகர்கள் மட்டும் இல்லாமல் உலக சினிமா ரசிகர்களும் பொன்னியின் செல்வன் படத்தை கொண்டாடி வருகின்றனர். படம் வெளியாகி ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை என அனைவரும் மத்தியிலும் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. இனிவரும் நாட்களில் இந்த படத்தின் வசூல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் ப்ரோமோஷன் வீடியோ ஒன்று வெளியாகியிருக்கிறது.

-விளம்பரம்-

ப்ரோமோஷன் வீடியோ:

அதாவது, படம் வெளியீட்டுக்கு முன்பு பொன்னியின் செல்வன் பட குழுவினர் ஒவ்வொரு மாநிலத்திலும் தங்களுடைய படத்தின் ப்ரோமோஷனலுக்காக சென்றிருந்தார்கள். அப்போது ப்ரோமோஷன் விழாவில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா லட்சுமி கலந்து கொண்டிருந்தார்கள். அதில் கார்த்தியும், விக்ரமும், ஜெயம் ரவி குறித்து சில சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து இருந்தார்கள். நடிகர் கார்த்தி கூறியிருந்தது, ஒரு முறை விக்ரம் உடைய மகன் துருவ் சூட்டிங் வந்தபோது ரவியை பார்த்து, ஹாய் பொன்னியின் செல்வன் என்று கூறியிருக்கிறார்.

விக்ரம் சொன்னது:

உடனே ஜெயம் ரவி, ஹாய் கென்னியின் செல்வன் என்று கூறினார். விக்ரமின் உண்மையான பெயர் கென் என்பது அனைவரும் தெரிந்து ஒன்று. இதை தொடர்ந்து விக்ரம் அவர்கள் கூறியிருந்தது, பிளைட்டில் நானும் ஜெயம் ரவியும் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது நான் ஒரு நடிகரை பத்தி பேசி இருந்தேன். உடனே ஜெயம் ரவி என்னிடம், அவர் எப்படி அழுகை, சந்தோஷம், காதல், துரோகம், சண்டை என எல்லாத்துக்குமே ஒரே ரியாக்ஷன் கொடுக்கிறார் என்று கிண்டல் செய்தார். உடனே நான், அவர் என்னுடைய நெருங்கிய நண்பர் என்று சொன்னேன். அதுதான் சார் நானும் கேட்கிறேன். எப்படி உங்கள் நண்பராக இருந்து என்று வியப்பில் ஜெயம் ரவி கேட்டார்.

ஜெயம் ரவி கிண்டல் செய்த நடிகர்:

மேலும், விக்ரமுடைய நெருங்கிய நண்பர் விஜய், மகேஷ்பாபு என்பது அனைவருக்கும் தெரிந்தது. பலரும் மகேஷ்பாபுவை தான் ஜெயம் ரவி கிண்டல் செய்திருக்கிறார் என்று கூறினார்கள். இன்னொரு பக்கம், விஜய் குறித்து தான் ஜெயம் ரவி கூறியிருந்தார் என்று நிட்டிசன்கள் கூறி வருகிறார்கள். அதேபோல் காபி வித் டிடி நிகழ்ச்சியில் டிடி நடிகர்கள் குறித்து கேட்ட கேள்விக்கும் ஜெயம் ரவி இதே மாதிரி நகைச்சுவையாக பதில் அளித்து இருந்தார்.

விஜய்யா மகேஷ் பாபுவா ?

அப்போதும் சோசியல் மீடியாவில் ஜெயம் ரவி, மகேஷ் பாபுவை குறித்து தான் சொல்கிறார் என்றெல்லாம் பரவி இருந்தது. ஆனால், ஜெயம் ரவி மகேஷ் பாவின் ரசிகர் என்று பல முறை கூறி இருக்கிறார். அதனால் அவர் விஜய்யை தான் சொன்னார் என்று ஒரு சிலரும் ஜெயம் ரவி விஜய் மீது மரியாதை கொண்டவர் என்று அவர் விஜய் குறித்து பேசிய வீடியோவை பகிர்ந்து ஜெயம் ரவி சொன்னது மகேஷ் பாபுவை தான் என்று ஒரு சிலரும் கமன்ட் செய்து வருகின்றனர். இதனால் விஜய் மற்றும் மகேஷ் பாபு இருவருமே சமூக வலைதளத்தில் கேலிக்கு உள்ளாகி இருக்கின்றனர்.

Advertisement