கொரோனா பிரச்சனை காரணமாக திரைப்படங்கள் அனைத்தும் Ott தளத்தில் வெளியாகி வருகிறது. ஆனால், பெரிய நடிகர்களின் படங்கள் கொரோனா பிரச்சனை முடிந்த பின்னர் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சூர்யா தனது ‘சூரரை போற்று’ படத்தை Amazon OTT தளத்திற்கு விற்றுவிட்டார்.வரும் அக்டோபர் 30 ஆம் தேதி இந்த அமேசான் பிரைமில் இந்த திரைப்படம் வெளியாக இருக்கிறது.
இதனால் தமிழ்த் திரையுலகினர் பலரும் ஆச்சரியமடைந்தனர். ஏனென்றால், தென்னிந்தியத் திரையுலகில் ஓடிடி தளத்தில் வெளியாகும் முதல் பெரிய ஹீரோ படமாக ‘சூரரைப் போற்று’ அமைந்துள்ளது. இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள சூர்யா,பல்துறை கலைஞர்களின் கற்பனை திறனிலும் கடுமையான உழைப்பிலும் உருவாகும் திரைப்படத்தைச் சரியான நேரத்தில் மக்களிடம் கொண்டு சேர்ப்பது தயாரிப்பாளரின் முக்கியக் கடமை” என்று தெரிவித்துள்ளார்.
இருப்பினும் சூர்யாவின் இந்த முடிவிற்கு திரையரங்க உரிமையாளர்கள் பலரும் தங்களது அதிருப்தியையும் கண்டனத்தையும் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் மாஸ்டர் படமும் அமேசானில் வெளியாகுமா என்று ட்விட்டரில் ரசிகர் ஒருவர் கேள்வி கேட்டிருந்தார். அதற்கு பதில் அளித்துள்ள Amazon நிறுவனம், இது தொடர்பாக நாங்கள் இன்னும் எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. விரைவில் இது குறித்து செய்திகள் வரும் என்று கூறியுள்ளது.
இது ஒருபுறம் இருக்க, மாஸ்டர் படம் கண்டிப்பாக OTT தளத்தில் வெளியாவது என்று தயாரிப்பாளர்கள் சிலர் நம்பிகை தெரிவித்து இருக்கின்றனர். மேலும், மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ தெரிவித்த போது கூட ரசிகர்களுக்காக நடிகர் விஜய் மாஸ்டர் படத்தை திரையரங்குகளில் தான் வெளியிட ஆசைபடுகிறார். கண்டிப்பாக மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் தான் முதலில் வெளியாகும் என்று நம்பிக்கை அளித்துள்ளார்.