அந்த பெண்ணிடம் ஏன் இப்படி நடந்துகொள்கிறாய் என்று ஒரே அடி அடித்தார் – ரகசியம் சொன்ன எம் ஜி ஆரரின் பாதுகாவலர்.

0
7537
rajini
- Advertisement -

இந்தியாவில் இருந்த பிரபலமான தலைவர்களில் எம்.ஜி.ஆரும் ஒருவர். சினிமா என்ற ஒன்று இவருடைய காலத்திலிருந்து தான் தொடங்கியது. தற்போது இருக்கும் நடிகர்களுக்கெல்லாம் முன்னோடியாக திகழ்கிறார் எம்ஜிஆர். இவர் இந்தியாவின் தலை சிறந்த நடிகரும், தயாரிப்பாளரும், அரசியல்வாதியும் ஆவார். இவருடைய வாழ்க்கையில் நடிப்பும், அரசியலும் ஒரு முக்கிய பகுதியாகவே இருந்தது. தமிழ் திரையுலகில் 30 ஆண்டுகளுக்கு மேல் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து இருக்கிறார். இவரை தமிழ்நாட்டின் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டதால் தன்னுடைய அரசியல் பணியில் எந்த ஒரு குறையும் இல்லாமல் மக்களுக்கு பல நன்மைகளைச் செய்துள்ளார்.

-விளம்பரம்-
Image result for கே.பி.ராமகிருஷ்ணன்

- Advertisement -

தமிழ்நாட்டில் தொடர்ந்து மூன்று முறை முதல் அமைச்சராக இருந்துள்ளார். அப்படிப்பட்ட எம்ஜிஆருக்கு சினிமாவிலும் அரசியலிலும் சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக மெய்க்காப்பாளராக இருந்தவர் கே.பி.ராமகிருஷ்ணன் இவருக்கு தற்போது 86 வயதாகிறது. சண்டை கலைஞராக சினிமா உலகிற்கு அறிமுகமானவர் கே.பி.ராமகிருஷ்ணன். பல படங்களில் சண்டை காட்சிகளில் நடிகர் எம்.ஜி.ஆருக்கு டூப் போட்டுள்ளார். எம்.ஜி.ஆர் அரசியலுக்கு வந்த பின் அவரது நிழலாக பாதுகாப்பு பணியில் கே.பி.ராமகிருஷ்ணன் மேற்கொண்டார்.

இதையும் பாருங்க : அப்போ ஒரு பத்தாவது படிக்கற பொண்ணு வயசு தான் எனக்கு. என் அம்மாவிடம் புலம்பினேன் – நடிகை அதிர்ச்சி பேட்டி.

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்கள் அடித்ததாகக் கூறப்படும் செய்திகள் எல்லாம் வதந்தி என்று மெய்க்காப்பாளர் இராமகிருஷ்ணன் அவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும், இதை சுட்டிக் காட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் மெய்க்காப்பாளர் ராமகிருஷ்ணன். அதில் அவர் கூறியது, கடந்த 1979 ஆம் ஆண்டு ரஜினியை எம்ஜிஆர் ராமாவரம் தோட்டத்திற்கு வர சொல்லி இருப்பது உண்மை தான். ஆனால், எம்.ஜி.ஆர். அவர்கள் ரஜினியை அடிக்கலாம் இல்லை. இதெல்லாம் இவர்கள் நேரில் பார்த்த மாதிரியே கூறிவருகிறார்கள். உண்மை என்றால் ரஜினியை வர சொல்லி பின் அம.ஜி.ஆரும், ரஜினியும் ரொம்ப நேரம் பேசிக்கொண்டு இருந்தார்கள். ரஜினி அவர்களும் எம்ஜிஆரிடம் சில அறிவுரைகளைக் கேட்டு இருந்தார்.

-விளம்பரம்-

எம்ஜிஆரும், ரஜினி நீ வாழ்க்கையில் நல்ல இடத்திற்கு வருவாய், நல்ல பெண்ணை பார்த்து திருமணம் செய்து கொள். நன்றாக இருப்பாய் என்று அவர் பாசத்துடன் அவருக்கு அறிவுரை கூறினார். மீ.ஜி.ஆருக்கு ரஜினி மீது ஒரு தனிப்பட்ட மரியாதை இருந்தது. அதேபோல் ஒரு முறை கோவையில் நடந்த அரசியல் கட்சிக் கூட்டத்ற்கு எம்.ஜி.ஆர் சென்று இருந்தார். அப்போது பயங்கர கூட்டம். அப்போது எம்ஜிரை பார்ப்பதற்காக ஒரு பெண் அங்கு நின்று கொண்டிருந்தாள். அவர் பக்கத்தில் நின்றிருந்த ஒருவர் அந்த பெண்ணிடம் ரொம்ப அதிகமாக சில்மிஷம் செய்து கொண்டிருந்தார்.

https://www.facebook.com/watch/?v=631256820986439

இதை எம்ஜிஆர் பார்த்து விட்டார். பின் அந்த நபரை அழைத்து தனியாக கூப்பிட்டு வந்து அவனிடம் உனக்கு அக்கா தங்கச்சி இல்லையா? அந்த பெண்ணிடம் ஏன் இப்படி நடந்துகொள்கிறாய் என்று ஒரே அடி அடித்தார். நாங்கள் போலீசிடம் சொல்லிவிடலாம் என்று சொன்னோம். உடனே எம்.ஜி.ஆர் அதெல்லாம் வேண்டாம். இனிமேல் இந்த மாதிரி நடந்து கொள்ளாதே என்று அறிவுரை சொல்லினார் என்று கூறினார். மேலும், ரஜினிகாந்த் அரசியலுக்கு வருகிறார் என்று தெரிந்தவுடன் சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துக்கள் வந்து கொண்டிருக்கின்றன. இதனால் தான் இந்த மாதிரி எல்லாம் தகவல்கள் வருகிறது என்றும் ஒரு பக்கம் கூறி வருகிறார்கள்.

Advertisement