பீஸ்ட் படத்தால் வந்த வினை, நெல்சனை நம்பி பந்தயம் கட்ட யோசிக்கும் ரஜினி – லிஸ்டில் இருக்கும் அந்த இரண்டு இயக்குனர்கள்.

0
172
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனராக திகழ்பவர் நெல்சன் திலீப்குமார். இவர் இயக்குனர் மட்டுமில்லாமல் திரைக்கதை எழுத்தராக பல படங்களில் பணியாற்றி இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் தமிழ் விஜய் தொலைக்காட்சியில் வெளிவந்த சில ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு நெல்சன் இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். பின் இவர் சின்னத்திரையில் தயாரிப்புக் குழுவில் ஒருவராகவும் பணி ஆற்றியிருக்கிறார். பிறகு இவர் முதன்முதலில் 2010 ஆம் ஆண்டு நடிகர் சிலம்பரசனை வைத்து வேட்டை மன்னன் என்ற திரைப்படத்தை இயக்குனார். ஆனால், சில காரணங்களால் அந்த படம் பாதியிலேயே நின்றது. மேலும், 2018 ஆம் ஆண்டு நயன்தாரா நடிப்பில் வெளிவந்த கோலமாவு கோகிலா என்ற படத்தை நெல்சன் இயக்கினார்.

-விளம்பரம்-

இந்த படம் இவருடைய வாழ்க்கையில் ஒரு முக்கிய மைல் கல்லாக அமைந்தது என்று சொல்லலாம். காமெடி கமர்ஷியல் பாணியில் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்கப்பட்டது. பிறகு தமிழ் திரை உலகில் மிக பிரபலமான இயக்குனராக ஆனார். அதனைத் தொடர்ந்து இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்து இருந்த டாக்டர் படத்தை இயக்கி இருந்தார். இந்த படமும் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது. டாக்டர் படத்தில் பெண்கள், குழந்தைகள் கடத்தல் என சீரியசான பிரச்சினைகளை கொண்டிருந்தாலும் இதற்கிடையில் காமெடி கொண்டு வந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் ரசிக்க வைத்தது.

- Advertisement -

பீஸ்ட் படம் பற்றிய தகவல்:

இதனைத் தொடர்ந்து மூன்றாவது படமாக தற்போது இவர் விஜய் நடிப்பில் வெளிவந்து இருக்கும் பீஸ்ட் படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. மேலும், அனைவரும் எதிர்பார்த்த பீஸ்ட் படம் ஏப்ரல் 13 ஆம் தேதி உலகமெங்கும் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த படத்தில் ஒரு மால்-லை பயங்கரமான தீவிரவாதிகள் ஹைஜாக் பண்ணுகிறார்கள். எதர்ச்சையாக கடத்தப்படும் மால்-லில் விஜய் சிக்கிக் கொள்கிறார். பின் விஜய், மால்-லையும், மக்களையும் எப்படி காப்பாற்றினார்? இதன் பின்னணி என்ன? என்பது தான் படத்தின் மீதி கதை. பல எதிர்பார்ப்புடன் வெளிவந்த பீஸ்ட் படம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம் என்று கூறுகிறார்கள்.

பீஸ்ட் படம் குறித்த விமர்சனம்:

விஜய் இந்த படத்துக்கு எப்படி ஓகே சொன்னார்? என்றும், நிகழ்ச்சி ஒன்றில் கதை எழுதுவதற்கு மூன்று மாதங்களுக்கு மேல் நான் அமர மாட்டேன் என்று நெல்சன் பேச்சையும், பீஸ்ட் படத்தையும் ஒப்பிட்டு நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து உள்ளார்கள். இப்படி எக்கச்சக்கமான நெகட்டிவான விமர்சனங்கள் பீஸ்ட் பெற்று இருந்தாலும் வசூலில் சாதனை படைத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், பீஸ்ட் படத்தை தொடர்ந்து நெல்சன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து தான் இயக்கப் போகிறார் என்ற தகவல் ஏற்கனவே வெளியாகி இருந்தது. மேலும், நெல்சன்- சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்-அனிரூத் கூட்டணியில் உருவாகும் படம் ‘தலைவர் 169’. இதற்கான வீடியோ ஒன்றையும் அதிகாரபூர்வமாக அறிவித்து இருந்தார்கள்.

-விளம்பரம்-

ரஜினியின் அடுத்த படம் குறித்த தகவல்:

இந்நிலையில் நெல்சன் இயக்கத்தில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த், தனது புதிய படத்தை இயக்கும் வாய்ப்பை இயக்குனர் நெல்சனுக்கு பதில் வேறு ஒரு இயக்குனருக்கு கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான பீஸ்ட் படம் போதிய வரவேற்பைப் பெறவில்லை. இந்த நிலையில் ரஜினியின் அடுத்த படத்தை நெல்சன் இயக்குகிறார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருந்தது. ஏற்கனவே ரஜினியை வைத்து தயாரித்த அண்ணாத்த படமும் கடுமையான விமர்சனத்தை சந்தித்தால்

தலைவர் 169 படம் குறித்த தகவல்:

அடுத்து ரஜினி படத்தை எப்படியாவது சூப்பர் ஹிட்டாக கொடுக்க வேண்டும் என்பதில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் மும்முரமாக இருக்கிறது. ஆனால், பீஸ்ட் படத்தின் ரிசல்ட்டால் தற்போது சன் பிக்சர்ஸ் பயங்கர அப்செட் ஆகி உள்ளதாக தகவல் வெளியானது. இதனால் நெல்சனை நம்பி படத்தை தொடங்கலாமா? இல்லை வேறு ஒரு இயக்குனரை வைத்து இயக்கலாமா? என்ற குழப்பத்தில் ரஜினியும், சன் பிக்சர்ஸ் நிறுவனம் இருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டும் இல்லாமல் அட்லி மற்றும் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி ஆகிய இருவரில் ஒருவருக்கு ரஜினி தனது படத்தை இயக்கும் வாய்ப்பை வழங்கலாம் என்றும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் அடுத்த வாரம் அறிவிக்கப்பட்ட உள்ளதாக தகவல் வெளியாக உள்ளது.

Advertisement