கணவர் படத்தின் ப்ரீ ஷோவை பார்த்துவிட்டு கடுப்பான சம்மு ? சாய் பல்லவியின் காட்சிகளை மாற்ற சொன்னாரா சமந்தா?

0
52626
samantha
- Advertisement -

திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் அமலா. 1992-ஆம் ஆண்டு பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜுனாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் நடிகை அமலா. இவர்களுடைய மகன் தான் இப்போது பிரபல ஹீரோவாக தெலுங்கு திரையுலகில் வலம் வந்து கொண்டிருக்கும் அகில். நாகர்ஜுனாவின் இரண்டாவது மனைவி தான் அமலா என்பது குறிப்பிடத்தக்கது. நாகர்ஜுனாவின் மூத்த மனைவி லக்ஷ்மியின் மகன் தான் நடிகர் நாக சைத்தன்யா.

-விளம்பரம்-
Sai Pallavi, Naga Chaitanya join Sankranthi race - tollywood

தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தாவின் கணவர் இவர் தானாம். உலகமெங்கும் தற்போது ‘கொரோனா’ எனும் வைரஸ் தீயாய் பரவி வருகிறது. ஆகையால், ‘144’ போடப்பட்டுள்ளது. தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது, திரையுலகில் அனைத்து படங்களின் ஷூட்டிங்கும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், பல படங்களின் டீம் திட்டமிட்டு வைத்திருந்த தங்களது ஷூட்டிங் ப்ளானை மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

இதையும் பாருங்க : ஆதவன் படத்தில் வந்த இந்த காட்சியில் கயிறுல செஞ்ச தவற கவனீசீங்களா. இதான் அது.

- Advertisement -

‘கொரோனா’ பிரச்சனை முடிந்து எப்போது அனைத்து படங்களின் பணிகளும் துவங்கப்போகிறது என்பது பெரிய கேள்விக் குறியாக இருக்கிறது. இந்நிலையில், நடிகர் நாக சைத்தன்யா நடித்திருக்கும் ஒரு புதிய படம் குறித்து சில தவறான தகவல்கள் பரவிய வண்ணமுள்ளது. நாக சைத்தன்யா நடிப்பில் தயாராகி கொண்டிருக்கும் படம் ‘லவ் ஸ்டோரி’.

Rumours on Akkineni Naga Chaitanya's Love Story Movie Busted

இந்த படத்தினை பிரபல இயக்குநர் சேகர் கம்முலா இயக்கி கொண்டிருக்கிறார். இதில் நாக சைத்தன்யாவிற்கு ஜோடியாக சாய் பல்லவி டூயட் பாடி ஆடிக் கொண்டிருக்கிறார். மேலும், ராவ் ரமேஷ், போசனி கிருஷ்ணா முரளி, தேவயாணி ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.

இதையும் பாருங்க : அதை தாங்க முடியாமல் இதை செய்தேன் – நீண்ட காலத்திற்கு பின் சுச்சி லீக்ஸ் சர்ச்சை குறித்து மனம் திறந்த சுசித்ரா.

-விளம்பரம்-

இதற்கிடையில் இந்த லாக் டவுன் டைமில் படத்தை எடுத்த வரையிலும் நடிகர் நாக சைத்தன்யாவின் மனைவியும், நடிகையுமான சமந்தா பார்த்ததாகவும், படத்தில் சாய் பல்லவிக்கு அதிகம் முக்கியத்துவம் இருப்பதால் அதை மாற்றி அமைக்க சொன்னதாகவும் டோலிவுட்டில் தண்டோரா போடப்பட்டது. தற்போது, இது தொடர்பாக படக்குழுவினரிடம் விசாரிக்கையில் “பரவி வரும் இந்த செய்தி வதந்தியே. இந்த லாக் டவுன் டைமில் எப்படி சமந்தா மட்டும் படத்தை பார்த்திருக்க முடியும். நாக சைத்தன்யா ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமான பிறகு, இயக்குநரிடம் அப்படத்தின் கதையில் எந்த ஒரு கரெக்ஷனும் சொல்ல மாட்டார்” என்று தெரிவித்துள்ளனர்.

Advertisement