ஆதவன் படத்தில் வந்த இந்த காட்சியில் கயிறுல செஞ்ச தவற கவனீசீங்களா. இதான் அது.

0
4862
aadhavan

லாக்டுவுன் நீண்ட நீண்ட மீம் கிரியேட்டர்களின் சிந்தனை மேலும் மேலும் அதிகரித்து வருகிறது. இதனால் படங்களில் செய்த தவறுகளை எல்லாம் நோண்டி நொங்கெடுத்து மீம்களை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் ஆதவன் படத்தில் வரும் ஒரு காமெடி காட்சியில் வரும் தவறை சுட்டிக்காட்டி மீம் ஒன்று வெளியானது. சூர்யா நடிப்பில் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான ஆதவன் திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. இந்த படத்தில் வடிவேலுவுடன் சூர்யாவுக்கு அமைந்த காமெடி காட்சிகள் மிகவும் ரசிக்கப்பட்டு இருந்தது.

இரண்டு காலில் கட்டப்பட்ட கயிறு – பாலத்தில் இருந்து விழுந்த பின்னர் ஒரு காலில் மட்டும் தான் கட்டபட்டு இருக்கிறது

இந்த நிலையில் ஆதவன் படத்தில் வந்த ஒரு பிரபலமான காட்சியில் இருக்கும் தவறை நெட்டிசன்கள் கண்டு பிடித்து உள்ளனர். ஆதவன் படத்தில் வடிவேலு ஒரு காட்சியில் பாலத்தின் மேல் நின்று கொண்டு கயிற்றில் கல்லை கட்டி தற்கொலை செய்து கொள்ளபோவதாக சூர்யாவிடம் கூறி கொண்டு இருப்பார். அதன் பின்னர் சூர்யாவே வந்து வடிவேலுவின் கட்டை இறுக்கமாக கட்டுவார்.

- Advertisement -

ஆனால், வடிவேலு எழுந்த பின்னர் தான் சூர்யா தனது காலை கட்டி போட்டு இருப்பார் என்பதே அவருக்கு தெரியவரும் அப்போது வடிவேலுவின் இரண்டு கால்களும் கட்டபட்டு இருக்கும். ஆனால், சூர்யா வடிவேலுவை பாலத்தில் இருந்து தள்ளிவிட்ட பின்னர் பாலத்தின் கீழ் வடிவேலு ஒற்றை காலில் தொங்கி இருப்பார். சரி அப்படியே ஒற்றை காலில் கட்டபட்டது தான் என்றாலும், மேலே இருக்கும் போது வலது காலில் இருக்கும் கட்டு தொங்கும் போது எப்படி இடது காலில் வந்தது ?

கம்பிகளுக்குள் கயிறு சிக்கியது எப்படி ?

இரண்டாவதாக பாலத்தின் மீது வடிவேலு கல்லை கட்டி கொண்டு இருக்கும் போது அந்த கல், பாலத்தில் இருக்கும் கம்பிகளுக்கு கீழ் தான் இருக்கும். அப்போது சூர்யா வடிவேலுவை தூக்கி போட்ட பின்னர் வடிவேலு பாளத்தில் உள்ள கம்பிகளை தாண்டி கல்லுடன் சேர்ந்து தான் விழுந்து இருக்க வேண்டும். ஆனால், கயிற்றில் கட்டபட்ட அந்த கல் கம்பிகளுக்கு கீழ் மாட்டிக்கொண்டு இருக்கும். அது எப்படினு கொஞ்சம் சொல்லுங்களேன்.

-விளம்பரம்-
Advertisement