முன்னாள் கணவருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினாரா நடிகை சமந்தா? திடீர் முடிவுக்கு காரணம் என்ன?

0
147
- Advertisement -

பிரபல நடிகை சமந்தா மற்றும் அவரது முன்னாள் கணவர் நாக சைதன்யா குறித்த செய்திகள் தான் சமீபகாலமாக இணையத்தில் வைரலாகி வருகிறது. தெலுங்கு சினிமாவில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நாக சைதன்யா. இவர் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனா மகன் ஆவார். நாக சைதன்யா-சமந்தா இருவரும் காதலித்து இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள்.

-விளம்பரம்-

இருவரும் தென்னிந்திய சினிமாவில் மிகப் பிரபலமான ஜோடிகளாக வலம் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சமந்தா -நாக சைதன்யா இருவரும் பிரிய இருப்பதாக கடந்த 2021 ஆம் ஆண்டு சோசியல் மீடியாவில் அறிவித்திருந்தார்கள். இவர்களின் பிரிவு ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் பிரபலங்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதுவரை இருவருக்கும் இடையே என்ன பிரச்சனை? ஏன் பிரிந்தார்கள்? என்று எந்த விபரமும் தெரியவில்லை.

- Advertisement -

சமந்தா-நாக சைதன்யா பிரிவு:

பிரிவிற்குப் பின் சமந்தா தன் கேரியரில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இதற்கிடையே நடிகர் நாகா சைதன்யா, நடிகை சோபிதாவுடன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக சோசியல் மீடியாவில் வதந்திகள் பரவியது. இவர்கள் இருவரும் வெளிநாடுகளில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் இணையத்தில் வைரல் ஆகி இருந்தது. அதனைத் தொடர்ந்து சில மாதங்களுக்கு முன்பு, நாக சைதன்யா – சோபிதா நிச்சயதார்த்தம் நாக சைதன்யாவின் வீட்டில் எளிமையாக நடத்தப்பட்டது.

நாக சைதன்யா- சோபிதா நிச்சயதார்த்தம்:

சோசியல் மீடியா முழுவதும் இவர்களுடைய நிச்சயதார்த்த புகைப்படங்கள் தான் வைரலாகி இருந்தது. கூடிய விரைவில் இவர்களின் திருமண தேதி வெளியாகும் என்று கூறப்படுகிறது. சிலர் இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தாலும், சமந்தாவை விட்டு சோபிதாவை திருமணம் செய்வதற்காக சிலர் நாக சைதன்யாவை விமர்சித்து தான் வருகிறார்கள். இதனிடையே நாக சைதன்யாவும் சமந்தாவும் திருமணத்திற்கு முன்பு ஒரு பிளாட் வாங்கியிருந்தார்கள்.

-விளம்பரம்-

பிளாட் சர்ச்சை:

அந்தப் பிளாடை அவர்கள் விரும்பியபடி வடிவமைத்து கட்டினார்கள். உண்மையில் அது அவர்களின் கனவு இல்லம். ஆனால், அந்த பிளாட் வாங்கும் போது நாக சைதன்யாவை விட அதிகமாக செலவு செய்ததாக சமந்தா சில இடங்களில் கூறியதாக கூறப்படுகிறது. ஆனால், சோபிதாவுடனான திருமணத்திற்குப் பிறகு, அந்தக் குடியிருப்பில் குடியேற இருப்பதாக நாக சைதன்யா கூறியதாக ஒருபக்கம் கூறப்படுகிறது. அந்த முடிவுக்கு சோபிதா சம்மதிக்கவில்லையாம்.

நாக சைதன்யாவுக்கு நோட்டீஸ்:

பின் அங்கு தங்கினால் தனது முன்னாள் மனைவியின் நினைவுகள் வரும் என்றும் நாக சைதன்யா கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதோடு சோபிதாவை திருமணம் செய்ய இருக்கும் நாக சைதன்யா, அந்தப் பிளாடை அவருக்கு பரிசு அளிக்க இருப்பதாக தகவல்கள் உலா வருகின்றனர். இதை அறிந்த சமந்தா, அந்தப் பிளாட் வாங்கியதில் தனக்கான பங்கை திருப்பித் தர வேண்டும் என நாக சைதன்யாவுக்கு நோட்டீஸ் அனுப்ப இருப்பதாக சமூக வலைதளங்களில் செய்திகள் உலாவி வருகிறது. ஆனால், இவை எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.

Advertisement