கயல் சீரியலை விட்டு விலகும் சஞ்சீவ் ? அவரின் இன்ஸ்டா ஸ்டோரியால் ரசிகர்கள் குழப்பம்.

0
404
sanjeev
- Advertisement -

மக்களின் பொழுது போக்கு அம்சங்களில் ஒன்றாக சின்னத்திரை சீரியல்கள் திகழ்கிறது. சினிமா நட்சத்திரங்களுக்கு இணையாக சின்னத்திரை நட்சத்திரங்களுக்கும் ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உள்ளது. அதிலும் வெள்ளித்திரை நடிகரை விட சின்னத்திரை சீரியல் நடிகர்கள் தான் சோசியல் மீடியாவில் பயங்கர ஆக்டிவாக இருக்கிறார்கள். அதிகம் ரசிகர்களுடன் உரையாடுவது, புகைப்படம், வீடியோ வெளியிடுவது என்று சின்னத்திரை நடிகர்கள் தான் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

அதிலும் ஒவ்வொரு சேனலிலும் மக்களின் ஃபேவரிட் சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்கள் ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது. சன் டிவியில் புதிது புதிதாக சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு அக்டோபர் 25ஆம் தேதி ஒளிபரப்பப்பட்ட சீரியல் தான் கயல். தன் குடும்பத்திற்காக போராடும் ஒரு பெண்ணின் கதையை மையமாக வைத்து சீரியல் சென்று கொண்டிருக்கின்றது.

- Advertisement -

கயல் சீரியல் பற்றிய தகவல்:

மேலும், சீரியலில் கடின உழைப்பாளியான ஹீரோயின் கயல் தன்னுடைய வருமானத்தை வைத்து மொத்த குடும்பத்தையும் காப்பாற்றி வருகிறார். கயல் மற்றும் அவருடைய குடும்ப உறுப்பினர்களை சுற்றியும் மற்றும் அவரை காதலிக்கும் சஞ்சீவ் சுற்றியும் தான் கயல் உள்ளது. தற்போது சன் டிவி சீரியல் அதிக டிஆர்பி ரேட்டிங்கில் கயல் சீரியல் முன்னிலையில் உள்ளது. இந்த சீரியலில் கதாநாயகியாக சைத்ரா ரெட்டியும், கதாநாயகனாக சஞ்சீவ்வும் நடிக்கிறார்கள்.

விலகும் கதாபாத்திரங்கள் :

இந்த சீரியலில் கயல் மற்றும் அவரது குடும்பத்தை சுற்றியும் நகர்கிறது. அதே போன்று கயலை காதலிக்கும் சஞ்சீவியை பற்றியும் கதை நகருகிறது. இந்த நிலையில் கயலுக்கு தம்பியாக நடித்த அவினாஷ் விளக்கு ஹரி வந்திருந்தார். ஆனால் ஹரியும் இந்த சீரியலை விட்டு விலகியுள்ளார். தொடர்ந்து பலரும் இந்த சிரியலில் இருந்து விலகி வரும் நிலையில் எழில் கதாப்பாத்திரத்தில் நடித்து வந்த சஞ்சீவியும் விலகுவதாக சமீபாத்தில் தகவல்கள் வெளியாகின.

-விளம்பரம்-

சஞ்சீவி போட்டிருந்த பதிவு :

இந்த நிலையில் தான் தற்போது சஞ்சீவி அந்த புகைப்படத்தை பகிர்ந்து “இதனை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்” என்று பதிவிட்டிருந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் சிரியலை விட்டு வெளியேற வேண்டாம் சென்று பதிவிட்டு வருகின்றனர். ஆனால் சஞ்சீவி பதிவிட்டிருந்தது காமெடி தான் என்று சிலர் கூறி வரும் நிலையில் இதனை பற்றிய உண்மை தன்மை விரைவில் வெளிவரும் என்று ரசிகர்கள் மத்தியில் கூறப்படுகிறது.

Advertisement