கட்சி ஆரமிக்க போகிறாரா சிம்பு.! அறிவித்த மேனேஜர், பங்கமாக கலாய்க்கும் ரசிகர்கள்.!

0
915
simbhu
- Advertisement -

தென்னிந்திய சினிமா திரை உலகில் சர்ச்சை நாயகன் என்றால் அது ‘லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு’ தான். . இருப்பினும் சினிமாத் துறையில் அவரை குறித்து பல விமர்சனங்கள் எழுந்து கொண்டிருந்தன.
எப்படியிருந்தாலும் சிம்புவுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருந்து கொண்டுதான் வருகிறது. இந்த வகையில் நடிகர் சிம்பு அவர்கள் விரைவில் அரசியலில் குதிக்கப் போகிறார் என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன. சிறு வயதிலிருந்தே சினிமாவில் நடித்து வரும் சிம்பு தனக்கென ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி உள்ளார்.ஆனால் , நடுவில் சில தோல்வி படங்கள் வந்த நிலையிலும் ரசிகர்கள் அவரை கை கொடுத்து தூக்கி விட்டனர். அதைத் தொடர்ந்து, தற்போது அவர் நடித்து வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய செக்கசிவந்தவானம், வந்தா ராஜாவா தான் வருவேன் என்ற படங்கள் மூலம் மீண்டும் சினிமா களத்தில் இறங்கினர். இந்த படங்களை தொடர்ந்து சிம்பு தன்னுடைய உடல் எடையை குறைப்பததற்கு வெளிநாடு சென்று தீவிர கவனம் செலுத்தி வருகிறார். பின்னர் தன்னுடைய தம்பியின் திருமணத்தில் ரொம்ப பிஸியாக இருந்தார். அதற்குப் பின்னால் சிம்பு குடும்பத்தோடு வெளிநாடு சுற்றுலா பயணம் மேற்கொண்டார்கள்.

-விளம்பரம்-
Related image

இதற்கு முன்னால் சிம்பு நடிப்பில், வெங்கட்பிரபு இயக்கத்தில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் மாநாடு படம் குறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவியது. ஆனால் சிம்புவின் வருகைக்காக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஒரு ஆண்டுகளுக்கு மேலாக காத்திருந்தார்.மேலும், அவருடைய கால்ஷீட் தாமதமானதால் மாநாடு படத்திலிருந்து சிம்புவை நீக்கிவிட்டு வேறு ஒரு நடிகரை வைத்து படம் இயக்க போவதாக சுரேஷ் காமாட்சி இணையதளங்களில் கூறியுள்ளார். இதனால் கோபம் அடைந்த சிம்பு மாநாடு படத்திற்குப் போட்டியாக “மகா மாநாடு” என்ற படத்தை எடுக்கப் போவதாக அறிவித்துள்ளார். இந்தப் இந்த படத்தை தன்னுடைய தந்தை டி. ராஜேந்திரன் அவர்கள் தயாரிக்க போகிறார் என்றும் அறிவித்தார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்னால் மீண்டும் ஒரு ஒரு படத்தின் படப்பிடிப்பிற்காக வெளிநாடு சென்று உள்ளார். பிறகு வெளிநாடு சென்றுள்ள சிம்பு அடுத்த வாரம் சென்னை திரும்புகிறார் என்ற தகவல் வெளியானது. வீட்டுக்கு வந்ததும் அவர் முதல் வேலையாக தன்னுடைய ரசிகர் மன்றத்தின் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த போகிறார் என தெரியவந்து உள்ளது. அந்த ஆலோசனை கூட்டத்தில் அரசியல் கட்சி சம்பந்தமான முடிவுகள் எடுக்கப்படும் என தெரிகிறது.

- Advertisement -

சிம்புவின் நெருங்கிய நண்பரான ஹரி இது தொடர்பாக ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.ஹரி கூறியது,சிம்பு அவர்கள் சென்னை திரும்பி வந்ததும் ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளதாக தெரிவித்து இருந்தார். மேலும் ரசிகர் மன்றத்தில் பல மாற்றங்களை குறித்து விவாதித்து சில முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார். மேலும், தமிழகத்தைத் திரும்பிப் பார்க்கும் அளவில் இந்த மாற்றங்கள் இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.இதனைத்தொடர்ந்து சிம்புவின் தந்தையான டி.ராஜேந்திரர் அவர்கள் ஏற்கனேவே சில ஆண்டுகளுக்கு முன்னாலே அரசியலில் குதித்து விட்டார் என்றும் மேலும்,அவர் அகில இந்திய லட்சிய திராவிட முன்னேற்ற கழகத்தில் ஒரு பொறுப்பில் இருக்கிறார் என்ற தகவலும் வந்தது. சில மாதங்களுக்கு முன்னால் சிம்பு அவர்கள் காவிரி பிரச்சனை குறித்து அரசியல் பிரச்சனைகள் சம்பந்தமான கருத்துகளை கூறியது மக்களிடையே பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

-விளம்பரம்-

மேலும், இவர் புதிதாக எடுக்கும் மகா மாநாடு படம் அரசியல் சம்பந்தப்பட்ட கதையாக இருக்கும் என்று தகவல் வெளியானது. அப்படி இருந்தால் இந்த படத்தில் காவிரி பிரச்சனை, ஸ்டெர்லைட், ஜல்லிக்கட்டு போன்ற பிரச்சனைகள் குறித்த கருத்துக்கள் படத்தில் வர வாய்ப்பு உள்ளது என சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பரவி வருகின்றன. மேலும், சிம்புவின் நடிப்பில் வெளிவர உள்ள மகா மாநாடு படம் குறித்த தகவல்கள் சமூகவலைத்தளங்களில் வந்தவுடன் சிம்புவின் ரசிகர்கள் உற்சாகத்தில் ஆர்ப்பாட்டத்திலும் உள்ளனர். மேலும் இந்த படம் 125 கோடி பட்ஜெட் அளவிலும், ஐந்து மொழிகளிலும் எடுக்கப்பட உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்தனர். இந்த படத்தில் இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் என்னன்னு பார்த்தால் இந்தப் படத்தில் பாட்டு மற்றும் இடைவெளி இல்லை என்று கூறினார்கள். மேலும்,”நான் வந்துட்டேன்னு சொல்லு திரும்பி வந்துட்டேன்னு சொல்லு” என்று ரசிகர்கள் போஸ்டர் அடித்து இந்த மகா மாநாடு படத்தை கொண்டாடி வருகின்றனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement