-விளம்பரம்-
Home செய்திகள் பொழுதுபோக்கு

தேசிய விருது பெற்ற கமல் படத்தின் ரீ-மேக்கா தளபதி 64. லேட்டஸ்ட் தகவல் இதோ.

0
26227
thalapthy64

சினிமா திரை உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் தளபதி விஜய். மேலும்,அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள பிகில் படம் உலகம் முழுவதும் வெளியாகி மாஸ் காட்டி வருகிறது.
இதனைத்தொடர்ந்து தளபதி விஜய்யின் அடுத்த படமான ‘தளபதி 64’ படம் குறித்து பல தகவல்கள் இணையங்களில் வெளிவந்துள்ளது. இந்நிலையில் நடிகர் கார்த்திக் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் எழுதி, இயக்கிய படம் ‘கைதி’ சமீபத்தில் தான் பிகில் படத்திற்கு இணையாக திரையரங்குகளில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், மாநகரம்,கைதி படங்களை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் அவர்கள் விஜய்யை வைத்து “தளபதி 64” படம் இயக்கி வருகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. மேலும்,படத்தின் நாயகியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். அதோடு இந்த படத்தில் சாந்தனு பாக்யராஜ், ஆண்டனி வர்கீஸ், ஆண்ட்ரியா, கெளரி கிஷண், ப்ரிகிதா, ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத், ப்ரேம், சேத்தன், அழகம் பெருமாள், மேத்யூ வர்கீஸ், சுனில் ரெட்டி,வி.ஜே.ரம்யா உள்ளிட்ட பல முக்கியமான நடிகர்கள் நடித்து வருகின்றனர்.

-விளம்பரம்-

இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். மேலும், இந்த படத்தை எக்ஸ்பி கிரியேட்டர்ஸ் நிறுவனத்தின் மூலம் சேவியர் பிரிட்டோ தயாரிக்க உள்ளார்கள். மேலும், இந்த தளபதி 64 படத்திற்கு பெயர் இன்னும் வைக்கவில்லை. விஜய்க்கு வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கிறார். மேலும், இதனுடைய முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் தான் தொடங்கியது.மேலும், இரண்டாவது கட்ட படப்பிடிப்பு மூன்று வாரங்களாக புதுடெல்லியில் நடைபெற்றது. மேலும், இந்த படத்தின் கதை மற்றும் கதாபாத்திரங்களை குறித்து சமூக வலைத்தளங்களில் பல தகவல்கள் கசிந்து கொண்டே வருகின்றன. இதனைத்தொடர்ந்து விஜய் அவர்கள் இந்த படத்தில் கல்லூரி பேராசிரியராக நடித்து வருகிறார் என்பது தெரிய வந்துள்ளது. இந்த கதை தமிழகத்தை உலுக்கிய நீட் தேர்வை வைத்து இருப்பதாகவும், மேலும், இந்த நீட் தேர்வினால் பலியான அனிதா வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படம் தயாராக உள்ளதாகவும் இணையங்களில் பேசப்பட்டு வருகிறது.

இதையும் பாருங்க : இந்த தேதியில், இந்த நேரத்தில் குழந்தை பெற்றுக்கொள்வேன். பகிரங்கமாக அறிவித்த சமந்தா.

-விளம்பரம்-

அதுமட்டுமில்லாமல் நடிகர் சாந்தனு இந்த படத்தில் கல்லூரி மாணவனாக நடிக்கிறார். அவரது கதாபாத்திரம் வில்லனாக இருக்கிறது என்று கூறப்படுகிறது. இப்படி போய்க்கொண்டிருக்கும் நிலையில் ‘தளபதி 64’ படம் கமலஹாசனின் ‘நம்மவர்’ படத்தின் கதை என்று கூறப்பட்டு வருகிறது. மேலும்,1994 ஆம் ஆண்டு சேது மாதவன் இயக்கத்தில் கமல்ஹாசனும், கவுதமியும் நடித்து வெளிவந்த படம் ‘நம்மவர்’ ஆகும். இந்த படத்தில் கமலஹாசன் அவர்கள் கல்லூரி ஆசிரியர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார், இதனைத் தொடர்ந்து தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் நம்மவர் கதை உரிமையை இருந்து வாங்கி ரீமேக் செய்கிறார் என்ற மற்றொரு வதந்தியும் சமூகவலைத்தளங்களில் பரவி உள்ளது. அது மட்டுமில்லாமல் நம்மவர் படத்தில் கல்லூரி பேராசிரியர் கமல்ஹாசனுக்கும், கல்லூரியில் படிக்கும் ரவுடிக்கும் இடையே நடக்கும் மோதல் தான் கதையாக இருந்தது.

-விளம்பரம்-

மேலும்,கல்லூரியில் அனைத்து மாணவர்களிடமும் அன்பாகவும், பொறுமையாகவும் பழகுபவர் கமலஹாசன். ஆனால், அவருடைய பிளாஷ்பேக் பார்த்தால் மிக மோசமான ரவடி என்பது தெரியவருகிறது. இதனை தொடர்ந்து கமலஹாசனின் நம்மவர் கதையை கொஞ்சம் திருத்தம் செய்து தான் விஜய்யின் தளபதி 64 படத்தை எடுக்கப் போகிறார்கள் என்ற தகவல் சமூகவலைத்தளங்களில் வருகிறது. இது குறித்து இயக்குனர் கூறியது, நீங்கள் கூறும் வதந்திகள் எல்லாம் முற்றிலும் பொய்யானது. நான் இதை ஏற்றுக்கொள்ள மாட்டேன். தளபதி 64 படம் வேறு ஒரு கதையே தவிர நம்மவர் படத்தின் கதை அல்ல என்று கூறினார். இப்படி லோகேஷ் கனகராஜ் தளபதி 64 படம் குறித்து ஏன் இப்படி சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் வருகிறது என்று பார்த்தால், கைதி படம் படத்தின்போது லோகேஷ் கனகராஜ் அவர்கள் பேட்டி ஒன்று அளித்திருந்தார்.

அந்த பேட்டியில் கமலைப் பற்றி உயர்வாக பேசி இருந்தார். இதை வைத்துக்கொண்டு தான் நெட்டிசன்கள் இப்படி ஒரு செய்திகளை வெளியிட்டு வருவதாக படக்குழுவினர் தெரிவித்தனர். மேலும், இது உண்மை அல்ல என்றும் தளபதி 64 படத்தில் விஜய் அவர்கள் குடிகார பேராசிரியராக நடித்து வருகிறார் என்றும் கூறியுள்ளார்கள். அதுமட்டுமில்லாமல் அவருக்கு ஒரு கேங்ஸ்டர் பின்னணியும் இருக்கு. அது என்ன? அவர் எப்படி பேராசிரியர் ஆனார்? என பல விஷயங்கள் கொண்டது தான் தளபதி 64 படத்தின் கதையாகும். இந்நிலையில் டிசம்பர் மாதத்தில் விஜய்– விஜய் சேதுபதி இவர்களுக்கு இடைப்பட்ட சண்டை காட்சிகள் படமாக்க உள்ளது என்றும் தெரிவித்திருந்தார்கள்.

-விளம்பரம்-

Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news