ட்ரெண்டிங்கில் அஜித்தின் ஹேஷ் டேக்ஸ். அஜித் ட்விட்டரில் இணைய வேண்டும். ட்விட்டர் வேண்டுகோள் ?

0
774
ajith
- Advertisement -

தற்போது நாளுக்கு நாள் சமூக வலைத்தளங்களில் வரும் செயலிகள் எல்லாம் அதிகரித்துக் கொண்டே தான் போகின்றது. அந்த வகையில் ட்விட்டர் செயலி பயங்கர டிரன்டிங் என்று சொல்லலாம். இதில் பல விஷயங்களை பகிர்ந்து வருகிறார்கள் நெட்டிசன்கள். அந்த வகையில் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களாக இருப்பவர்கள் அஜித், விஜய். இவர்கள் குறித்து ரசிகர்கள் டுவிட்டரில் பதிவு செய்யும் கருத்துக்கள் எல்லாம் அட்ராசிட்டி. மேலும், சமூக வலைத்தளங்களில் ஹாஸ்டேக்குகளாக மாற்றி இவர்களுடைய படங்கள், இவர்கள் இருவரும் சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் பதிவிட்டு வருகிறார்கள். இதனால் இந்தியா முழுவதும் இது மிகப் பெரிய அளவில் பிரபலம் ஆகிறது என்று சொல்லலாம்.

-விளம்பரம்-
Image result for Ajith

- Advertisement -

அது மட்டுமில்லாமல் ஒரு சில நேரங்களில் நீ பெரிய ஆளா? நான் பெரிய ஆளா? இப்படி போட்டிக்காக கூட ரசிகர்கள் ஹாஸ்டேக்குகளை உருவாக்கி இந்திய அளவில் ட்ரெண்டிங் செய்து வருவார்கள். இப்படி ரசிகர்கள் கொண்டாடும் அஜீத், விஜய் இவர்கள் இருவரும் ட்விட்டர் தளத்தில் இல்லை விஜய் பெயரில் இருக்கும் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கு எல்லாம் இவருடைய அலுவலகம் சார்ந்து இயங்குவதாகும். ஆரம்பத்தில் அந்த டுவிட்டர் கணக்கு வாயிலாக ரசிகர்களுடன் விஜய் அவர்கள் உரையாடுவார். ஆனால், சமீப காலமாக அவர் அந்த உரையாடலையும் நிறுத்தி விட்டார். மேலும், விஜய் அவர்களின் படம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் மட்டும் பகிரப்பட்டு வருகிறது. ஆனால், அஜித்துக்கு அந்த மாதிரியான ட்விட்டர் கணக்கு அலுவலகத்தில் கூட கிடையாது.

இதையும் பாருங்க : படு கிளாமரான ஆடைகளில் போஸ் கொடுத்து அசத்தியுள்ள காலா பட நடிகை ஹுமா குரோஷி.

அஜித் ட்விட்டரில் இல்லை என்றாலும் அவருடைய ரசிகர்கள் அஜித் படம் குறித்தும், அறிவிப்புகள் குறித்து தகவல்களை பதிவிட்டு வருகிறார்கள். இந்நிலையில் 2019 ஆம் ஆண்டின் ட்விட்டர், ட்ரண்டிங், ஹஸ்டக் இவையெல்லாம் குறித்து “தி ஹிந்து” ஆங்கில நாளிதழ் ஒன்று இந்தியாவின் ட்விட்டர் பார்ட்னர்ஷிப் மேனேஜர் செரில் ஆன் கூட்டோரிடம் பேட்டி அளித்து உள்ளார்கள். அப்போது பேட்டியில் அவரிடம் நீங்கள் எப்போதாவது அஜீத்தை தொடர்பு கொண்டு பேசி உள்ளீர்களா?? என்று கேட்டார்கள். அதற்கு செரில் ஆன் கூட்டோ கூறியது, அஜித் அவர்கள் ட்விட்டர் வர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அவரது படங்களையும் ரசிகர்கள் ஒருவருக்கு ஒருவருடன் தொடர்பு கொள்வதையும் எந்த அளவுக்கு விரும்புகிறார்கள் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தார். இதை பார்த்து தல அஜித் என்ன பதில் கூறுவார் என்று தெரியவில்லை ஆவலுடன் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

-விளம்பரம்-

நேர்கொண்ட பார்வை படத்தின் மாஸ் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வினோத்தும், தயாரிப்பாளர் போனிகபூர் இருவரும் மீண்டும் இணைந்து தல அஜித்தை வைத்து “வலிமை” படத்தை உருவாக்கி அஜித்தை இந்த படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவாளராக உள்ளார். படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. மிகவும் ரகசியமாக ஷூட்டிங்கை நடத்தி வருகின்றார் இயக்குனர். இந்த படத்தில் தல இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்றும் பேசப்படுகிறது. இந்த படத்தில் அதிரடி ஆக்ஷன் காட்சிகளும், பைக் ரேஸ் காட்சிகளும் கண்டிப்பாக இருக்கும் என்று ரேஸ் என்று கூறினார்கள். வலிமை படம் அடுத்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என்றும் படக்குழுவினர் அறிவித்து உள்ளார்கள்.

Advertisement