இது தான் நயன்தாராவின் திருமண தேதியா ? விக்னேஷ் சிவனின் இன்ஸ்டா பதிவால் ரசிகர்கள் குஷி. இதோ புகைப்படம்.

0
307
vignesh
- Advertisement -

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஹாட் காதல் ஜோடிகளாக திரையுலகில் வலம் வந்துக்கொண்டிருக்கின்றனர். விக்னேஷ் சிவனுக்கு முன்பாக நயன்தாரா சிம்பு மற்றும் பிரபுதேவாவை காதலித்து நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான் ஆனால் இந்த இரண்டு காதலை விட நயன்தாரா விக்னேஷ் சிவன் உடனான காதலில் தான் மிகவும் உறுதியாக இருந்து வருகிறார். இவர்களின் இருவர் திருமணம் எப்போது என்பது தான் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து வரும் ஒரு விஷயம். சமீபத்தில் கூட இவர்கள் இருவருக்கும் ரகசிய திருமணம் நடைபெற்றுவிட்டது என்று செய்திகள் பரவியது.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் இதுகுறித்து விளக்கமளித்த விக்னேஷ் ஷுவான் இதுவரை சமூக வலைத்தளத்தில் எங்களுக்கு ஒரு இருபத்தி இரண்டு முறைக்கு மேல் திருமணம் செய்து வைத்து விட்டார்கள். நாங்கள் இருவரும் அவரவர் வேலையை செய்து வருகிறோம். அதேபோல எங்கள் இருவருக்குமே குறிக்கோள் மற்றும் லட்சியங்கள் இருக்கிறது அதனை அடைந்து முடித்த பின்னர் தான் திருமணம்.

இதையும் பாருங்க : ‘அஜித்தை அறிமுகம் செய்ய என் மனைவியை அழைத்தேன், அப்போது அவர்’ – அஜித் குறித்து ராஜமௌலி சொன்ன செம தகவல்.

- Advertisement -

ஏற்கனவே திருணம் குறித்து பேசிய விக்கி :

அதேபோல இப்போது எங்கள் இருவருக்கும் காதல் நன்றாக சென்று கொண்டிருக்கிறது. அந்த லவ் நல்லா இருக்கிறது. அந்த காதல் போர் அடித்து விட்டால் திருமணம் செய்துகொண்டுகொள்வோம் என்று கூறி இருந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் விக்னேஷ் சிவன், நயன்தாராவுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இருந்தார். அதில் நயன்தாரா,அவரது கையில் அணிந்திருக்கும் மோதிரம் படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார் விக்னேஷ் சிவன்.

Producer Rajan Bashes Nayanthara| நயன்தாரா குறித்து ராஜன்

ரகசிய நிச்சயதார்த்தத்தை முடித்த நயன் :

இதனால் நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடிக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்திருக்குமோ என யூகங்கள் கிளம்பியது. இதுகுறித்து நெற்றிக்கண் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் உறுதிப்படுத்திய நயன்தாரா, தனக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் நிச்சயதார்த்தம் முடிந்தாக கூறியிருந்தார். தாங்கள் மிகவும் privateஆன நபர்கள் என்பதால் நிச்சயதார்த்தம் பற்றி பெரிதாக வெளியில் சொல்லவில்லை.

-விளம்பரம்-

இப்படி ஒரு தேதியில் திருமணமா:

wikk

ஆனால், நிச்சம் திருமணத்தை அனைவருக்கும் சொல்லிவிட்டு தான் பண்ணுவோம் என்று கூறி இருந்தார். ஆனாலும், இன்னமும் இவர்கள் திருமணத்தை பற்றி அறிவிக்கவில்லை. இந்த நிலையில் விக்னேஷ் சிவன் தன் இன்ஸ்டா ஸ்டோரியில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இருந்தார். அதில் ‘யாரெல்லாம் 2-22-22 தேதியில் திருமணம் செய்துகொள்ள போகிறீர்கள், நான் அந்த தேதியை மிஸ் செய்ய விரும்பவில்லை’ என்று குறிப்பிடபட்டுள்ளது.

உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ள தந்தை :

Nayanthara's Father Kurian Kodiyattu Suddenly Hospitalized In ICU

இதை பார்த்த ரசிகர்கள் பலரும் அப்போது அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நயன்தாரா திருமணம் முடிந்துவிடுமா என்று கூறி வருகின்றனர். ஏற்கனவே நயன்தாராவின் தந்தை உடல் நிலை சரியில்லாமல் இருப்பதால் அவருக்காக தான் நயன்தாரா யாருக்கும் சொல்லாமல் திடீரென்று நிச்சயதார்த்தத்தை முடித்ததாக கூறப்படுகிறது. எனவே, அடுத்த ஆண்டு நயன் திருமணம் முடித்தாலும் ஆச்சரியபடுவதர்க்கு இல்லை.

Advertisement