விஜய்க்கு அரசியல் ஆசை வந்துடிச்சா ? முக்கிய பிரபலத்துடன் சந்திப்பு ? யார் தெரியுமா ?

0
245
vijay
- Advertisement -

தளபதி விஜய்யை தேர்தல் வியூக மன்னன் பிரசாந்த் கிஷோர் சந்தித்ததாகவும் தமிழக அரசியல் குறித்து பேசியதாகவும் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் தளபதி விஜய். மாஸ்டர் படத்தை தொடர்ந்து விஜய் அவர்கள் தற்போது பீஸ்ட் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கி இருக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் செல்வராகவன், பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கு அனிருத் இசையமைப்பாளராக பணிபுரிந்து இருக்கிறார்.

-விளம்பரம்-

இந்த படத்தின் இறுதிகட்ட வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த படத்தின் அரபிக்குத்து பாடல் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இந்த பாடல் வெளியானதை தொடர்ந்து 150 மில்லியன் பார்வையாளர்களை நெருங்கி இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் அரபி குத்துப்பாடல் வெளியானதிலிருந்து ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை என பலரும் நடனமாடி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். இந்நிலையில் தளபதி விஜய்யை தேர்தல் வியூக மன்னன் பிரசாந்த் கிஷோர் சந்தித்து இருப்பதாக சோசியல் மீடியாவில் தகவல் வைரலாகி வருகிறது.

- Advertisement -

தேர்தல் வியூக மன்னன் பிரசாந்த் கிஷோர்:

யார் இந்த தேர்தல் வியூக மன்னன் பிரசாந்த் கிஷோர் என்று பார்த்தால், பிரதமர் மோடி, மம்தா பானர்ஜி, மு க ஸ்டாலின் ஆகிய பல பேரை அரசியலில் வெற்றி பெற வைத்து பதவியில் உட்கார வைத்தவர். இந்தியாவில் பல அரசியல் ஜாம்பவான்களை உருவாக்கி பிரபலமான நபராக திகழ்பவர் தேர்தல் வியூக மன்னன் பிரசாந்த் கிஷோர். இப்படி இருக்கும் நிலையில் இவர் சமீபத்தில் நடிகர் விஜயை சந்தித்ததாகவும் தமிழக அரசியல் குறித்து பேசியதாகவும் கூறப்படுகிறது.

தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம்:

ஏற்கனவே விஜய் 2020ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சேர்ந்தவர்கள் போட்டியிட்டார்கள். அந்த தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மொத்தம் 169 பேர் போட்டியிட்டார்கள். அதில் 129 பேர் வெற்றி பெற்றுள்ளார்கள். இப்படி விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றது அரசியல் வட்டாரத்தில் கதிகலங்க வைத்தது. அதுமட்டுமில்லாமல் வெற்றியாளர்களை அழைத்து அவர்களை பாராட்டியும் இருந்தார் விஜய்.

-விளம்பரம்-

தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் பற்றிய தகவல்:

பின் பல ஆண்டுகளுக்கு பிறகு தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து தமிழக அரசு அறிவித்து இருந்தது. வழக்கம் போல் இதில் எதிர் கட்சி அதிமுக, ஆளும் கட்சி திமுக, பாஜக, நாம் தமிழர், சுயேட்ச்சை வேட்பாளர் என பல கட்சிகள் போட்டி இட்டார்கள். அதில் விஜய் மக்கள் இயக்க கட்சியும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டது. தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19 ஆம் தேதி நடைபெற்றது. நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் பின்னடைவை சந்தித்து இருந்தாலும் அவர்கள் சோர்வடையாமல் தொடர்ந்து மக்கள் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

விஜய்-பிரசாந்த் கிஷோர் சந்திப்பு குறித்த தகவல்:

இந்நிலையில் பிரசாந்த் கிஷோர், விஜயை சந்தித்து 1 மணிநேரம் பேசிய இருப்பதும், அந்த சந்திப்பின்போது தமிழக அரசியலில் இணைவது குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால், விஜய் தரப்பில் இப்படி ஒரு சந்திப்பு நடை பெறவில்லை என்று கூறப்படுகிறது. இப்படி வெளியாகும் தகவல்கள் அனைத்துமே வதந்தி என்று விஜய் தரப்பில் விளக்கம் அளித்துள்ளார்கள். இதிலிருந்து விஜய் அரசியல் குறித்து வரும் செய்திகள் முற்றிலும் பொய் என்று விஜய் தரப்பில் இருந்து கூறப்படுகிறது.

Advertisement